இந்திய ஆயுர்வேத மருத்துவமுறை பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. மேலும் அதன் நடைமுறைகளின் வழி முழுமையான சுகாதார மேம்பாட்டை ஆயுர்வேத மருத்துவமுறைத் தருவதாக மக்கள் பெரிதும் நம்புகின்றனர். சூரியனில் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிப்பது அத்தகைய அற்புதமான நடைமுறைகளில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தின்படி, சூரிய ஒளி தண்ணீரின் மீது விழும்போது, ​​அது அதன் மூலக்கூறு அமைப்பை அதிகரித்து, 'இறந்த நீரை' 'உயிருள்ள நீராக' மாற்றுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.


இது பெரும்பாலும் 'சூர்ய சிகிட்சா' அல்லது சூரிய ஒளியால் நீரை குணப்படுத்தும் ஆயுர்வேத கலை எனப் போற்றப்படுகிறது. ஆயுர்வேதம் 'சூரியான்ஷு சந்தப்தம்' என்கிற முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது, இது 'சூரிய சக்தியால் சுத்திகரிக்கப்பட்ட நீர்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆழமான வேரூன்றிய சிகிச்சையாகும், இது அதர்வ வேதத்தில் சூர்ய கிரண் சிகிட்சா என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது சூரிய கதிர்களால் குணப்படுத்தப்படுகிறது.


சூரிய சக்தியூட்டப்பட்ட தண்ணீரைப் பற்றி மேலும் அறிய, ஹெல்த்ஷாட்ஸ் நிறுவனத்தின்ஆயுர்வேத நிபுணர் டாக்டர் இப்சிதா சாட்டர்ஜியிடம் பேசினோம்.


"என்னவகையான பாட்டில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், சூரிய ஒளி அதில் இருக்கும் நீரால் உறிஞ்சப்பட்டு அதில் உயிர் உற்பத்தியை மீண்டும் திரும்பக் கொண்டுவருகிறது. ஊட்டமளிக்கும் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் காரணமாக நுண்ணுயிர் சுமை குறைகிறது. கூடுதலாக, வெப்பமும் ஒளியும் நீரை உறிஞ்சி ஆக்சிஜனேற்றம் செய்து, ஆற்றலுடன் பிரகாசிக்கச் செய்கிறது. சூரிய ஒளியில் ஏற்றப்பட்ட நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு சிறஎத பாதையாகும். இது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது,” என்கிறார் இப்சிதா சாட்டர்ஜி.


குணப்படுத்துதல், புத்துணர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பெரும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தவிர, சூரிய ஒளி ஊட்டப்பட்ட தண்ணீரைக் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். சில நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:


சோலார் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிப்பதால் ஆற்றல் அதிகரிக்கும். சூரிய ஒளியில் ஏற்றப்பட்ட தண்ணீரைக் கொண்டு நம்மை ஹைட்ரேட் செய்துகொள்வதால் நாம் புத்துணர்ச்சியை அடையலாம். இது செல்லுலார் அளவிலான பாதிப்பை சரிசெய்வதாகவும் அறியப்படுகிறது. சோலாரைஸ் செய்யப்பட்ட நீரில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை சுத்தப்படுத்த அல்லது கண்களை கழுவுவதற்கு ஏற்றது. சூரிய ஒளியில் படர்ந்த நீர் செரிமான சக்தியை அதிகரிக்கிறது, உங்கள் பசியை அதிகரிக்கிறது மற்றும் செரிமான அமைப்பின் பிரச்சனைகள், வயிற்றில் உள்ள புழுக்கள், அமிலத்தன்மை மற்றும் வயிற்று புண்களை தீர்க்கிறது.