Aviyal Recipe : கேரளா ஸ்டைலில் டேஸ்டியான அவியல் .. இன்னைக்கே ட்ரை பண்ணி அசத்துங்க...

கேரளா ஸ்டைலில் டேஸ்டியான அவியல். சாதம், தோசைக்கு சூப்பர் சைட்டிஷ் .எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

தேவையான பொருட்கள் 

Continues below advertisement

வாழைக்காய் – 1, கேரட் -1, சேனைக்கிழங்கு – சிறிய துண்டு, கொத்தவரங்காய் – 5, அவரை – 6, கோவைக்காய் – 10,வெள்ளைப் பூசணி – சிறிய துண்டு, பீன்ஸ் – 6, கத்தரிக்காய் -2 , முருங்கைக்காய் –  2 . உங்களுக்கு பிடித்த  வேறு காய்கறிகளையும் இதனுடன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கட்டாயமாக, கோவக்காய், வாழைக்காய், முருங்கைக்காய்,  இருக்க வேண்டும்.

செய்முறை

குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளில் எல்லாவற்றிலும் உங்களுக்கு தேவையான அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, அந்த காய்கறிகளை சுத்தமாக கழுவி விட்டு, மிகவும் பொடியாக அல்லாமல், மிகவும் பெரியதாகவும் அல்லாமல் சரி அளவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவியலுக்கு காய்களை சற்று நீள வாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த காய்கறிகளை எல்லாம்,  அகலமான பாத்திரத்தில்  சேர்த்து, கொஞ்சமாக உப்பு சேர்த்து, 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து  மூடி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். காய்கறிகள்  குழையாத வகையில் பக்குவமாக வேக வேண்டும். காய்கறிகள் குழைந்தால் அவியல் ருசி குறைந்து விடும். 

காய்கறி வெந்து கொண்டிருக்கும் போதே, அரைமூடி அளவு தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு, காரத்திற்கு தேவையான அளவு நான்கிலிருந்து ஐந்து பச்சை மிளகாய், 1 ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில், திக்கான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காயை சற்று திப்பிதிப்பியாக இருப்பது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சில பேர் இந்த அவியலில் பூண்டு சேர்க்க மாட்டார்கள். பூண்டு சேர்த்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி,  ஏழு நிமிடங்கள் வரை மிதமான தீயில் அவியலை கொதிக்க விடவேண்டும். இப்போது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

அவியலை இறக்குவதற்கு 2 நிமிடத்திற்கு முன்பு,  இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும்.  புளித்த தயிரை சேர்க்க கூடாது. இப்போது தேங்காய் எண்ணெய்யில் கடுகு கருவேப்பிலை, வர மிளகாய் தாளித்து அவியலில் சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார். 

மேலும் படிக்க

World Athletics Championships: உலக தடகளம்.. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட மூன்று இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வு..!

PM Degree Defamation Case: பிரதமர் மோடியின் கல்வி விவரம் குறித்து அவதூறு பரப்பினாரா கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றம் அதிரடி

Continues below advertisement
Sponsored Links by Taboola