உலக புவி தினத்தை முன்னிட்டு (World Earth Day) கூகுள் நிறுவனம் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை குறிப்பிடுவது போலான சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
உலக புவி தினம்
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 1970-ல் மிகப்பெரிய எண்ணெய் கசிவு விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் அதிகரிப்பால் பூமி மாசுபடுவது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த சில அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினர்.1970-ம் ஆண்டு 20-ம் தேதி 2 கோடி பேர் கலந்துகொண்டு மாபெரும் பேரணி நடத்தினர். மனிதர்கள் பூமியை எவ்வளவு மாசுபடுத்திவருகிறார்கள் என்பதை அந்தப் பேரணியில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதி புவி தினம் அமெரிக்கர்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்பிறகு, 1990-ம் ஆண்டு ஐ.நா. சபை ‘புவி தினம்’ கடைபிடிப்பது அங்கீகரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஏப்ரல் 22-ம் தேதி உலக புவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சம்வெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தையும் பாதுகாப்பும் பொறுப்பு மக்களுக்கு இருப்பதை உணர்த்துவதற்காக இந்தநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழ மாசுபாடு ஆகியவற்றின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. பூமியின் வளங்களைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாம் அதை பாதுகாக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கை முறையை பூமிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைத்துகொள்ள வேண்டும். பூமிக்கு எதிராக அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிகைகளையும் நாம் கைவிட வேண்டும் என்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டிற்கான கருப்பொருள் .Planet vs. Plastics’ பூமி Vs பிளாஸ்டிக் என்பதாகும்.
கூகுள் சிறப்பு டூடுல்
கூகுள் முக்கியத்துவம் வாய்ந்த தினத்தன்று சிறப்பு டூடுல் வெளியிடுவது வழக்கமானது. ‘புவி தினம்’ கொண்டாடப்படும் நாளில் பூமியின் அழகு, அதிலுள்ள சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாடு உள்ளிட்டவற்றின் முக்க்கியத்துவத்தையும் உலக அளவில் பூமியை பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது.
பூமி அழகின் இயற்கையை விவரிக்கும் புகைப்படங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வீடியோவை வைத்து ’Google' என்று எழுத்துகள் வருமாறு புகைப்படத்தை இணைத்து உருவாக்கியுள்ளது.
இதிலுள்ள முதலெழுத்து 'G' Turks and Caicos Islands என்பதை குறிக்கிறது. இங்கு நடைபெறும் பல்லுயிர் பெருக்கம், ரீஃப் ரெஸ்டோரேசன் ஆகியவற்றின் முக்கியத்துவதை உணர்த்துகிறது.
'O’ என்ற எழுத்து மெக்சிகோவில் உள்ள தேசிய பூங்காவில் உள்ள 'Scorpion Reef'-ன் முக்கியத்துவத்தையும் அதற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. இந்தப் பூங்காவில் உள்ள நீர்வாழ் உயிரின சரணாலயம் அங்குள்ள Coral பல்லுயிர் பெருக்கமும் ஏராளமான அழிவின் அச்சுறுத்தலில் இருக்கும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது.
’O' ஐஸ்லாந்தில் உள்ள Vatnajökull தேசிய பூங்காவில் உள்ள மிகப்பெரிய க்ளேசியர். இது யுனெஸ்கோவிம் உலக பாரம்பரிய இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
'G' பிரேசிலின் Jaú -ல் உள்ள தேசிய பூங்காவின் புகைப்படம். இதில் அமேசான் பகுதியில் உள்ள ஏராளமான உயிர்களின் வாழ்விடமாக உள்ளது.
‘L’ -ல் நைஜீரியாவில் உள்ள க்ரேட் க்ரீன் வால் ( Great Green Wall) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
'E' என்பது ஆஸ்திரேலியாவின் பில்பாரா தீவுகளின் ரிசர்வை குறிக்கிறது.
இந்த டூடுல் Airbus, CNES/Airbus, Copernicus, Maxar Technology, and USGS/NASA Landsat ஆகிய நிறுவனங்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டுள்ளது.
புவி தின வீடியோவை காண யுடியூப் லிங்க்