ஒரு காதல் உறவு என்பது நெருக்கம், நம்பிக்கை, ஆதரவு சம்மந்தப்பட்டது. ஒரு நபரை அவரது முழு வாழ்க்கையை அவர் செல்லும் வழியை விரும்பி ஏற்றுக்கொண்டு அவர் எல்லாவற்றையும் செய்ய ஆதரவாக நிற்பதே உறவுகளின் மகத்துவம். இதை தொடர்ச்சியாக செய்யும்போது இருவருக்கும் ஏற்படும் அலைவரிசை பெரும்பாலும் ஒன்றாக இருக்கும். அது தவறும்போது சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். கொஞ்சம் பெரிதாக இருந்தால் இருவரும் பேசி தீர்க்கலாம். ஆனால் பேசுவதற்கோ, தீர்ப்பதற்கோ, உறவை தொடர்வதற்கோ மனம் ஒவ்வாத நிலையில் அந்த உறவில் இழுத்து பிடித்து நிற்பது இருவர் நலனுக்கும் கெடுதல் என்பதுதான் நிதிசர்சனம். 


ஒரு பக்கம் இருந்து மட்டும் வரும் அன்பு


நாம் தருவது போலவே அன்பை மறுபுறம் இருந்து பெறும் வரை மட்டுமே உறவுகள் கொஞ்சம் சீராக செல்லும். அது என்று இல்லாமல் போகிறதோ அதன் பிறகு இருவரும் ஒன்றாக இருப்பது, இருக்க முயற்சிப்பது, மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உங்கள் அன்பை, பிணைப்பைக் கெடுக்கும். அதுமட்டுமின்றி அத்தகைய காலங்கள் நாம் அதுவரை நன்றாக வாழ்ந்த வாழ்வின் நினைவுகளையும் மங்கச்செய்துவிடும். உடனடியாக வெளிப்படையாய் பேசி சுமூகமாக பிரிந்தால் அந்த நினைவுகளையாவது கறை படியாமல் காப்பாற்றலாம். எனவே உங்கள் சொந்த நலனுக்காக நீங்கள் அத்தகைய உறவுகளிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் எப்படி செய்வது என்று பலர் யோசிக்கலாம். இதுபோன்ற உறவில் இருந்து நீங்கள் வெளியேறுவதற்கான சில வழிகள் இங்கே.



பிரியும்போது நேர்மை வேண்டும்


ஒரு உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிடும்போது நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் இருந்து திடீரென்று பிரியக்கூடாது. நீங்கள் ஏன் இனி உறவில் நீடிக்க விரும்பவில்லை என்பதை அவர்களிடம் தெரிவிக்கவும். இருவருக்கும் இடையே பொருந்தாமல் இருக்கும் விஷயங்கள், சிக்கல்கள் பற்றி பேசுங்கள். மேலும் அவர்களுடன் அருகில் இருக்கும்போதே தொலைவில் இருப்பதுபோல உணருவதை விளக்குங்கள். 


தொடர்புடைய செய்திகள்: விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? அம்பேத்கர் சிலைக்கு மாலை.. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.. பரபரப்பாகும் அரசியல் களம்..!


தொழில்நுட்ப ரீதியாகவும் பிரிய வேண்டும்


நீங்களும் உங்கள் துணையும் கூட்டு வங்கிக் கணக்குகள், காப்பீட்டுக் கொள்கைகள் அல்லது பிற நிதி ஆவணங்களை வைத்திருந்தால். உங்கள் கணக்குகளைப் பிரித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நீங்கள் எந்த பொறியிலும் விழுந்து பணத்தை இழக்காமல் இருக்க கவனமாக இருங்கள். 



வாழ்வின் இலக்குகளில் கவனம் செலுத்தலாம்


நீங்கள் வாழ்க்கையில் மற்ற இலக்குகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் சிக்கலான உறவில் இருக்கும்போது உங்கள் வாழ்க்கையும் உங்கள் எண்ணங்களும் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகிவிடும். படிப்படியாக, உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதில் அல்லது உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதில் உங்கள் கவனத்தை மாற்றவும். இது உறவை முறித்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மீள உதவும்.


மனநல நிபுணரை அணுகலாம்


உங்கள் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும், பிரிந்த நிலையில் இருந்து வெளியே வரவும், மனநல நிபுணரின் உதவியைப் பெறுங்கள். பெரும்பாலான உறவுகளில், தங்களுடைய கவனத்தை ஈர்க்க தங்கள் துணையை சார்ந்து அல்லது கட்டாயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் சுயமரியாதையை இழக்கிறார்கள். மனநல சிகிச்சையைத் தேடுவது உங்கள் திறன்களில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், உங்களுக்காக சிறந்த வாழ்க்கையை உருவாக்கவும் உதவும்.