உங்களுடைய ஈகோ, கோபம் போன்றவற்றை விட்டு நல்ல நட்புடன் பழகினாலே தாம்பத்ய வாழ்க்கையில் சுவாரஸ்சியத்திற்கு பஞ்சமே இருக்காது எனக்கூறப்படுகிறது.


தாம்பத்யம் என்பது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நல்ல புரிதலை ஏற்படுத்தும். ஆனால் சில நேரங்களில் தாம்பத்யத்தில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கையே முற்றிலும் பாதித்துவிடும். ஆனால் இதற்கு என்ன செய்வது ?என்று கேட்க மாட்டார்கள். இதோடு  கூச்ச உணர்வை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இனி கவலை வேண்டாம். தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள்.





புதிதாக திருமணம் ஆன தம்பதியினருக்கு தாம்பத்யத்தில் எந்தளவிற்கு ஆர்வம் இருக்கிறதோ? அதே அளவிற்கு தயக்கமும் இருக்கும். எனவே முதலில் உங்களது துணையுடன் முதலில் நன்றாக பேசுங்கள். இதனையடுத்து ஒருவருக்கு மற்றவரிடம் தயக்கம் இல்லாத படி இணக்கத்தை ஏற்படுத்துங்கள். ஒருவேளை நீங்கள் காதல் திருமணம் செய்தவர்களாக இருந்தால் ஒரளவிற்கு உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கும். ஆனால் வீட்டில் பார்த்து நிச்சயித்து திருமணம் செய்தவர்களாக இருந்தால் ஒருவரை ஒருவர் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு கண்மூடித்தனமான இருவரும் தங்களுக்குத் திருமணமாகிவிட்டது என்பதையெல்லாம் மறந்து ஒருவர் மீது ஒருவர் காதலில் விழ வேண்டாம்.


இதோடு முக்கியமாக, ஒருவருக்குப் பிடிக்காததை மற்றொருவர் செய்யக் கூடாது என்று காதலர்கள் இருப்பது போலவே மாற வேண்டும். அப்போது தான் இயல்பாக ஒருவர் மீது இன்னொருவருக்கு ஈர்ப்பு அதிகமாகும். குறிப்பாக உடல் ரீதியான ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் கூடும். அதன்மூலம் தொடருகின்ற பாலுறுவு நீண்ட நெடுங்காலத்திற்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இனிமையானதாகவே இருக்கும் என்பதில் மாற்றமில்லை.


குறிப்பாக தம்பதியினர் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்னதாக உங்களை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதோடு உடல் உறவு கொள்ளும் நேரத்தில் கூட, ஒருவரையொருவர் எது பிடித்திருக்கிறது? என்ன வேண்டும்? எது பிடிக்கவில்லை? என்று கேட்டுக்கொண்டே உடலுறவில் ஈடுபடுவது ஆண்- பெண் இருவருக்குமே சுவாரஸ்சியத்தையும் விருப்பத்தையும் அதிகரிக்கச்செய்யும் எனக்கூறப்படுகிறது.





இதோடு குறிப்பாக உங்களது உடல் உறவிற்குப் பிறகு திருப்தி அடைந்து விட்டீர்களா? என இருவரும் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் கேட்கும் போது இதற்கு முன் செய்த சிறு சிறு தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் இன்னும் அதிக சுவாரஸ்சியத்தை ஏற்படுத்தவும் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் உடலுறுவைப் பொருத்தவரையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட வரைமுறை எதுவும் கிடையாது. உறவில் ஈடுபடும் இருவருக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் முயற்சி செய்துப் பார்க்கலாம். இது உங்களுடைய தாம்பத்ய உறவில் மேலும் நல்ல புரிதலையும், மகிழ்ச்சியையும் உங்களுக்கு ஏற்படுத்தும்.