உக்ரைன் நாட்டில் கடந்த 4 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிகாரிகள் பெலாரெஸில் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. 


இந்நிலையில் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்து தொடர்பாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ”ரஷ்யா உடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் அதை பெலாரெஸில் வைத்து நடத்தக் கூடாது. ஏனென்றால், பெலாரெஸ் நாடு மூலம் தான் உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அங்கு இருந்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாக கூறியிருந்தது. இதற்காக ரஷ்யா அதிகாரிகள் பெலாரெஸ் நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபரின் கருத்து வெளியாகியுள்ளது. 


ரஷ்யா-உக்ரைன் பிரச்னை என்ன?


உக்ரைன் நாடு 1991ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு உக்ரைன் நாட்டு அரசிற்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் இருந்து வந்தனர். எனினும் தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் தலையீடு இருந்து கொண்டே வந்தது. 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக வந்த விக்டர் யெஸ்சென்கோ ரஷ்யாவின் தலையீடுகளிலிருந்து உக்ரைன் நாட்டை முழுவதும் விடுபட வைப்பதாக கூறினார். 2010ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே ஒரு எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தானது. 




2013ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டு உடனான பொருளாதார வர்த்தகத்தை உக்ரைன் நாட்டு அதிபர் நிறுத்தினார். இதன்காரணமாக அங்கு தெற்கு பகுதியில் கடும் கிளர்ச்சி உருவானது. இதைத் தொடர்ந்து  நாட்டின் தெற்கு பகுதியான கிரீமியாவை 2014ஆம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஆக்கிரமித்து ரஷ்ய கொடியை ஏற்றினர். அதன்பின்னர் கிரீமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளார்கள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதியில் உக்ரைன் நாட்டு அரசு அமைதியை சீர்குலைக்கும் விதகமாக கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாக ரஷ்ய குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காரணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு அரசு ஒரு டிரோனை பயன்படுத்தியது. இது தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் சூழல் உருவாக தொடக்க புள்ளியாக அமைந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண