பீர் வெளிநாடுகளில் சாதாரண பானம். இங்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அருந்தக் கூடிய பானம்.


பீரில் ஆல்கஹாலின் அளவு குறைவு என்பதால் அதை இளசுகள் கூட இயல்பாகக் குடித்துவிட்டு ஷைனிங்குக்காக, உடம்பு வெயிட் போட என்றெல்லாம் கூறுகின்றனர். அதன் உடல்நல விளைவுகள் பற்றி தனிக்கட்டுரையாகவே எழுதலாம். இப்போது அதுவல்ல நம் பிரச்சினை. பீர் பாட்டில்கள் ஏன் பச்சை அல்லது பிரவுன் நிறத்தில் மட்டுமே இருக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.


பியர் அல்லது பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகவும் பீர் இடம்பெற்றுள்ளது. தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாப்பொருளை நொதிக்கவைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. தேவையான மாப்பொருள் பொதுவாக பார்லி முளைக்கூழிலிருந்து பெறப்படுகிறது. எனினும் கோதுமை, சோளம், அரிசி போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலான பீர் வகைகள் ஒப் தாவரத்தின் பூக்களை சுவையூட்டிகளாக பயன்படுத்துகின்றன. ஒப் பூக்கள் பியருக்கு அதன் கைப்புச் சுவையைக் கொடுப்பதோடு காப்புப்பொருளாகவும் செயற்படுகின்றன. ஒப் பூக்களை விடுத்து பச்சிலை, பழங்கள் போன்றவையும் சில வகை பியர்களில் சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன.


ஆரம்ப காலங்களில் பீர் பானம் க்ளியர் வெள்ளை பாட்டில்களில் தான் அடைத்து விற்கப்பட்டது. பல ஆண்டுகளாக இதுவே பழக்கமாக இருந்துள்ளது. அப்புறம் அந்தப் பாட்டிலை கவர்ச்சிகரமாக கலர்ஃபுல்லாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே மதுபான உற்பத்தியாளர்கள் பல முயற்சிகளையும் மேற்கொண்டனராம்.




இதற்கு முக்கியக் காரணம் க்ளியர் பாட்டிலில் சூரியனின் யுவி கதிர்கள் ஊடுருவும் அது, பீரில் உள்ள அமிலத்துடன் ரியாக்ட் ஆகிவிடும். இதற்கான தீர்வைத் தேடிய பயணத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது தான் பிரவுன் கலர் பாட்டில்கள். அடர்த்தியான பழுப்பு நிற பாட்டில்களில் சூரியனின் யுவி கதிர்கள் ஊடுருவுவது மிகவும் குறைந்தது. இது மதுபான உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.


மேலும் இந்த பிரவுன் குப்பிகளில் அடைக்கப்பட்ட பீர் வெகு காலமாக சுவை மாறாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லாம் சரியாகத்தான் சென்றது.


இரண்டாம் உலகப் போரின்போது பிரவுன் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த க்ளியர் பாட்டில்களை வாடிகையாளர்கள் விரும்பவில்லை. இதனால் பீர் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினையை சமாளிக்க மதுபான உற்பத்தியாளர்கள் இன்னொரு முடிவை எடுத்தனர். பிரவுன் நிறத்துக்குப் பதிலாக பச்சை நிற பாட்டில்களைப் பயன்படுத்தினர். அதனை ப்ரீமியம் வகை பீர் என அறிமுகப்படுத்தினர். பச்சை பாட்டில் பீருக்கு மவுசு பலமடங்கு எகிறியது.




அதன் பின்னர் இருந்துதான் உலகம் முழுவதும் அனைத்து பீர்களும் ஒன்று பிரவுன் நிற பாட்டில் இல்லை பச்சை நிற பாட்டில் என இரண்டு கலர் பாட்டிலில் வருகிறது. இனி அடுத்துமுறை பீர் அருந்தும் போது நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நிச்சயம் ஒரு சூப்பர் ஸ்டோரியாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பீருக்கு ஒரு சைட்டிஷ்!


மது உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு என்பதை மறக்க வேண்டாம்...!