மஞ்சள் பாரம்பரிய மருத்துவ முறை, ஆயுர்வேதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக கருதப்படுகிறது. கோல்டன் சன்சைன் மஞ்சள். இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக ஆயுர்வேத மருந்தாக உள்ளது. பெரும்பாலும் இந்திய சமையல் முறையில் மஞ்சள் நிச்சயம் இருக்கும். மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்களே அதற்கு காரணம்.
உணவில் தினமும் ஏன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்த்துகொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
ஆரோக்கியமான செரிமான மண்டலம்
செரிமானத்திற்கு மஞ்சள் உதவுகிறது. மஞ்சள் உடலில் bile உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் கொழுப்புகளை கரைத்து செரிமானத்தை துரிதப்படுகிறது. இதிலுள்ள ஆன்டி- இன்ஃப்ளமேட்ரி குணம் செரிமான மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க..
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.
மூளையின் செயல்திறன் அதிகரிக்க..
மஞ்சளில் உள்ள ’Curcumin’ மூளையின் செயல்திறனை அதிகரித்து காக்னிடிவ் செயல்திறனை அதிகரிக்கிறது. தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சளை உங்கள் டயட்டில் இருப்பது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட
நமது தவறாக உணவுமுறைகளால் அதிகமாக பாதிக்கப்படுவது கல்லீரல். ஒரு டீஸ்பூன் மஞ்சள் உணவில் இருப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உணவும் தினமும் மஞ்சள் இருக்கட்டும். பாலில் மஞ்சள் சேர்த்து சாப்பிடலாம். மஞ்சள் டீ, மஞ்சள் க்ரீன் டீ என நிறைய ஆப்சன் இருக்கிறது.
உடல் எடையை குறைக்க..
சளி, இருமல் இருந்தால் இஞ்சியை தேனுடன் சாப்பிடலாம். மஞ்சள்,மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். இது தொண்டையை எளிதில் குணப்படுத்துகிறது மற்றும் தொண்டை கரகரப்பு, எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. நாம் அனைவரும் வீட்டில் வைத்திருக்கும் அத்தகைய அடிப்படை மசாலாப் பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததுதான். சளி தொல்லை நீங்க மஞ்சள் பால் குடித்திருப்போம். காயங்கள் ஏற்படும்போதும் அது மேலும் அதிகரிக்காமல் இருக்க, காயம்பட்ட இடத்தில் மஞ்சள் வைப்போம், அது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் எடை இழப்புக்கு மஞ்சள் எப்படி உதவும்.
மஞ்சள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது; இன்சுலின் அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. எனவே கொழுப்புகள் உடலில் தக்கவைக்கப்படுவதில்லை. பருமனானவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சள் சாப்பாடில் எடுத்துக்கொள்வதால் நிறைய நன்மை பெறலாம் என்று கூறப்படுகிறது. கெட்ட கொழுப்புகள் குறைக்க மஞ்சள் பயன்படும்.
மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை தேநீர் தினமும் குடிக்கலாம். புதினா இலைகளையும் அதோடு சேர்க்கலாம். இலவங்கப்பட்டை இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கும். மற்றும் புதினா செரிமான மண்டலத்தை சீராக இயங்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சி மஞ்சள் தேநீர் குடிக்கலாம்.