எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நாட்கள் வேலைப்பளு அதிகமாக இருக்கும். நேர மேலாண்மை சில நாட்கள் தவறி விடும். நேரம் போதவில்லை அதனால் சரியாக உணவு எடுத்து கொள்ள முடியாமல் போகும். அதனால் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் இருக்கும் . நேரத்திற்கு தகுந்தாற் போல், வீட்டில் எளிமையாக செய்ய கூடிய உணவு வகைகளை பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.


தயிர் சாதம் - முழுமையான ஒரு உணவாக இருக்கிறது. எளிதில் செரிமானம் ஆக கூடிய விரைவில் செய்து முடிக்க கூடிய உணவு. காய்கறி புலாவ், முட்டை சாதம் போன்றவை சிறந்த மாற்றாக இருக்கும்.




 


போஹா - அவல் உப்புமா சீக்கிரம் செய்ய கூடியது. ஊட்டச்சத்து மிக்கது. அவல் உப்புமா, கோதுமை ரவா கிச்சடி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.


 






முட்டை சாண்டவிச்- இது சீக்கிரம் செய்யலாம். அதே போல் இது ஊட்டச்சத்துகள் மிக்கது. காய்கள் சேர்த்தும், முட்டை சேர்த்தும் சாண்டவிச் செய்து சாப்பிடலாம்.




உலர் பழங்கள் - இது ஊட்டச்சத்து மிக்கது. பாதாம் பருப்பு, முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்தி பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.




 


பழங்கள் - எந்த நேரத்திலும், பழங்கள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்கும். பழங்கள் சாப்பிடுவது விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கும். அவசரமான நேரங்களில், சாப்பிடுவதற்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாத நேரங்களில் பழங்களை எடுத்து கொள்ளலாம்.