ப்ரெஷர், ப்ரெஷர்னு பேசுறீங்களா? ஓடாம நின்னு நிதானமா தெரிஞ்சுக்க வேண்டியது இதைத்தான்..
வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் உணவு கட்டுப்பாடு இரண்டும் இருந்தால், இரத்த அழுத்தம் சரியான அளவுடன் இருக்கும். என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொள்வது அவசியம்.
Continues below advertisement

உயர் ரத்த அழுத்தம்
30 வயதை கடந்தவர்களுக்கு இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவது, சாதாரணமாகி விட்டது. இரத்த அழுத்த பிரச்சனைக்கு காரணம், வாழ்வியல் முறை தான். வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் உணவு கட்டுப்பாடு இரண்டும் இருந்தால், இரத்த அழுத்தம் சரியான அளவுடன் இருக்கும். என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொள்வது அவசியம்.
Continues below advertisement
எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் -
Just In

என்னாது? இவங்கள்லாம் பழங்கள் சாப்பிட கூடாதா? ஏன்? மருத்துவர் எச்சரிக்கை!

பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!

Screen Time: ஏது 25 வருஷம் கோவிந்தாவா.. கொந்தளிக்கும் மனைவிகள், பசங்க ஜாலி, ஸ்க்ரீன் டைம் குறைப்பது எப்படி?

மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
Rabies: ரேபிஸ் கண்டறியப்பட்டால் 100% மரணம்; தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்
- போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை தருகிறது. தலை சுற்றல் மயக்கம் ஏற்படும் சமயங்களில் தண்ணீரை பக்கத்தில் வைத்து தேவையான நேரங்களில் எடுத்து கொள்ளுங்கள்.

- தாவரங்களில் இருந்து கிடைக்கும் கொழுப்பு சத்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். சூரிய காந்தி எண்ணெய் , நல்லெண்ணெய், நிலக்கடலை எண்ணெய் , ஆலிவ் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கொழுப்பு உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.அளவான சத்தான கொழுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
- சோடியம் - ஒரு நாளைக்கு 3-12 கிராம் அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். சரியான அளவு அல்லது குறைந்த அளவு உப்பு எடுத்து கொண்டால் போதுமானது. உயர் இரத்த அழுத்தம் என்று தெரிந்த பிறகு, உப்பு கட்டுப்பாடு எடுத்து கொள்ளுங்கள்
- பொட்டாசியம் - பொட்டாசியம் சத்து நிறைந்த பால்,பழங்கள், காய்கள் அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்.
- கால்சியம் - பால், தயிர், கீரைகள், கேழ்வரகு போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
தவிர்க்கவேண்டிய உணவுகள்
- உப்பு - உப்பு குறைத்து கொள்ள வேண்டும். நீண்ட நாட்கள் உணவு பொருள்கள் கெடாமல் இருப்பதற்கு உப்பில் ஊறவைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு உப்பு மற்றும் எண்ணையில் ஊற வைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் உப்பை தவிர்க்க வேண்டும்.
- விலங்குகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பு சத்தை தவிர்க்க வேண்டும். இது அதிக அடர் ஆற்றலுடன் இருக்கும். கலோரிகள் நிறைந்தது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் , துரித உணவுகள், எண்ணையில் பொரித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சோடா, போன்ற குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Continues below advertisement
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.