உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு தூக்கம், உடற்பயிற்சி இல்லையென்றால் நினைவாற்றல் குறைவு, சிந்திப்பதில் சிக்கல், கவனச்சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று ஃபின்லாந்த் பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பள்ளி, கல்லூரி, அலுவலக வேலை நாட்களில் சரியான நேரத்திற்கு தூங்குச் செலவது’ வார இறுதி நாட்களில் இரவு முழுவதும் முழித்திருப்பது என்ற பழக்கமே சரியானது இல்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். என்றைக்காவது ஒரு நாள் என்றால் பரவாயில்லை. ஆனால், இதையே பழக்கமாக கொண்டால் அது மூளையில் செயல்பாட்டை பாதிக்குமாம். இரவு நேர வேலைக்கு செல்பவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர்களின் சூழல் ஒரு காரணமாக இருந்தாலும் அதன் பாதிப்புகளில் இருந்து தப்புவது எளிதானது இல்லை.


ஒரு மாதம் முழுக்க சரியாக தூங்காமல், சில நாட்கள் கழித்து நன்றாக தூங்கி அதை சரிசெய்யலாம் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்படி சரியாக தூங்காதவர்களை அதாவது ஒரு நாளைக்கு  6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிந்தனை திறன் பிரச்சனைகள், நினைவாற்றல் குறைவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஃபின்லாந்தில் உள்ள Aalto University மற்றும் the University of Oulu இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் மூளை செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கப்பட்டுள்ளன. 


போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் 7-15 நாட்கள் நீடிக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 8-9 மணி நேரம் தூங்க வேண்டும். அப்படியில்லை எனில் நீண்ட நாள் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடற்பயிற்சி இல்லாமை, சீராக தூக்கம் இல்லாமை ஆகியவற்றினால் ஒரு விசயத்தில் கவனம் செலுத்துவது கடினமானதாக மாறிவிடும். 


கவனம் சிதறல்


நீண்டகால தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் அது அறிவாற்றலையும் பாதிக்கும். சில விசயங்களை நினைவு கூர்வதில் சிக்கல் ஏற்படலாம். கவனம் செலுத்துவது மற்றும் நினைவில் வைத்திருப்பது சவாலானதாக இருக்கும். இதுவும் தூக்கமின்மை பிரச்சனையின் ஒரு அறிகுறி. உற்பத்தி திறனை தூக்கமின்மை பிரச்சனையில் பாதிக்கலாம்.


 மனநிலை மாற்றம்


தூக்கமின்மை மனநிலையை கணிசமாக பாதிக்கும். எரிச்சல் உணர்வு, மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. சோகம் அல்லது பதற்ற உணர்வு ஏற்படும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்படி ஆகிவிடும்.


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.