ஒரு முறை சர்க்கரை வியாதி வந்தால் வாழ் நாள் முழுவதும், சர்க்கரை நோயாளியாக இருக்க வேண்டியது தான், என்ற ஒரு கட்டுக்கதை நிலவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. அதாவது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகளை மட்டும் நம்பி இருக்க கூடாது. சில வாழ்வியல் முறை மாற்றங்களாலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சுறுசுறுப்பான வாழ்வியல் முறை, உடற் பயிற்சி, உணவு கட்டுப்பாடு, அமைதியான மனநிலை ஆகியவற்றை பின்பற்றினால் இரத்தத்தில் சர்க்கரை அளவோடு இருக்கும். நீங்கள் மற்றவர்களை போன்று ஆரோக்யமானவர்களாக இருக்கலாம்.


ஆனால் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சில தவறுகளை செய்வார்கள். அதனால் சர்க்கரையின் அளவு குறையாமல் அதிகரித்து கொண்டே இருக்கும். இந்த தவறுகளை மாற்றி கொள்ளுங்கள். நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.





  • நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது - நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் எடை அதிகரிக்கும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். மேலும் பல ஆரோக்கியமின்மை பிரச்சனைகள் வரும். அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.





  • அதிக கொழுப்பு மற்றும் அதிக கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது. அதிக அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது, சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகளை சாப்பிடுவது, பதப்படுத்த பட்ட உணவுகளை எடுத்து கொள்வது போன்றவை. இதனை தவிர்த்து ஆரோக்கியமான கொழுப்பு சத்து  மிக்க உலர் பழங்கள், விதைகள், எண்ணெய்கள் எடுத்து கொள்ளலாம். இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்கு நன்மை பயக்கும்.





  • ஒரு உணவிற்கு அடுத்த உணவிற்கும் நீண்ட இடைவெளி எடுத்து கொள்வது, நீரிழிவு நோயாளிகள், சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம். இது போன்ற நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு உணவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும்.





  • பழங்கள் - நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடவே கூடாது. அல்லது நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாம். இப்படி இரண்டு தரப்பு வாதம் இருக்கிறது. ஒவ்வொரு பழத்திலும் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது. இதை அளவோடு எடுத்து கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அளவுக்கு அதிகமாக பழங்களை சாப்பிட்டாலும் தவறு. சாப்பிடாமலே இருந்தாலும் அது தவறு.





  • மனஅழுத்தம் - நீங்கள் நினைப்பதை விட அதிக ஆபத்துகளை மனஅழுத்தம் விளைவிக்கும். இது உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதிக்கும். அதனால் மனஅழுத்தம் இல்லாமல், இயல்பாக வாழ பழகி கொள்ளுங்கள். மனஅழுத்தம் குறைப்பதற்கு தியான பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள் ஆகியவற்றை செய்து பழகுங்கள்.





  • தூக்கமின்மை - தூக்கம் சரியாக இல்லையென்றால் இது பல்வேறு ஹார்மோன் விளைவுகளை ஏற்படுத்தும். ஹார்மோன் குறைபாடு நோய்கள், குழப்பம், மனஉளைச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் குறைந்தது 6-8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கம் கட்டாயம் வேண்டும்.