கூந்தல் பளபளப்பாக, நீளமாக, மற்றும்  ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி உள்ளிருந்து வலுவாகவும் இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம் . இருப்பினும், விரும்பிய முடிவுகளை அடைய போதுமான முடி பராமரிப்பு பழக்கவழக்கங்களுடன் அதிக அளவு பொறுமை மற்றும் தடுமாறாத சிந்தனையும் தேவைப்படுகிறது. பலர் விலையுயர்ந்த கூந்தல் பராமரிப்புப் பொருட்களை மட்டுமே சார்ந்து இருக்கும் அதே வேளையில், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்துக்கு அவசியமான சில தினசரி தலைமுடி பழக்கங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.


ஆரோக்கியமான கூந்தலுக்கு தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா பரிந்துரைத்துள்ள இந்த மிக எளிதான மற்றும் பயனுள்ள குறிப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது. “சூரியன் மற்றும் காற்று மாசு பாதிப்பு,தலைமுடிக்கான ஸ்டைலிங் பொருட்கள், மற்றும் கெமிக்கல் ட்ரீட்மெண்ட் ஆகியவை உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்து, மந்தமானதாக மாற்றும். இதிலிருந்து தப்பித்து பளபளப்பான, ஆரோக்கியமான, உயிர்ப்புள்ள தலைமுடியைப் பெற தனது மூன்று குறிப்புகளைப் பின்பற்றுமாறு அவர் குறிப்பிடுகிறார்.






உங்கள் தலைமுடியை சரியாக ஷாம்பு செய்யவும்


உங்கள் ஷாம்பூவை சிறிது தண்ணீரில் குழைத்து, உச்சந்தலையில் அதிகமாகப் பயன்படுத்துங்கள்,என அவர் பரிந்துரைக்கிறார். "ஷாம்பூவை உச்சந்தலையில் கண்டிஷனரை கீழே கூந்தலுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளூங்கள்." என்கிறார் அவர்.


தலைமுடிக்கான மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்


மேலும், வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைக்கிறார். "அந்த ஹேர் மாஸ்க்கை நீங்கள் இன்னும் கூடுதலான நேரத்துக்குத் தலைமுடியில் பயன்படுத்தலாம், அது சிறப்பாக செயல்படும்" என்கிறார் அவர். 


பட்டு தலையணை உறையைப் பயன்படுத்தவும்


பட்டு தலையணை உறையைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது கூந்தல் உராய்வைக் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அது உடைவதையும் கட்டுப்படுத்துகிறது.