இந்திய பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் பண்பாடுகள் நிறைந்த நாடு. ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேறு விதமாக பின்பற்றப்படுகின்றன. தென்னிந்தியாவில், கொண்டாப்படும் தீபாவளி நாளில், காலை எழுந்ததும் முதலில் செய்வது, நல்லெண்ணெய் குளியல். இந்த நல்லெண்ணெய் குளியல் பல்வேறு பயன்களை கொண்டுள்ளது.




தீபாவளி நாளில் எடுத்து நல்லெண்ணெய் குளியலுக்கு தனி சிறப்பு உண்டு. காலை சூரிய உதயமாவதற்கு முன், குடும்பத்தில் இருக்கும், பெண்கள் மற்ற நபர்களுக்கு உச்சந்தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, சீகைக்காய் தேய்த்து , வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும். பிறகு அன்றைய நாளுக்கான மற்ற பூஜை மற்றும் மற்ற நண்பர்களை சந்திப்பது, உறவினர்களுடன் பலகாரம் பகிர்ந்து அளிப்பது போன்றவை மூலம், பண்டிகை கொண்டாட்டமும், குதூகலமும், நிறைந்து இருக்கும்.


நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, உடலை குளிர்ச்சியாக வைக்கும். சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றது.


பருவ நிலை மாற்றங்களால் வரும், உடல் உபாதைகள் வராமல் தடுக்க இந்த நல்லெண்ணெய் குளியல் சிறப்பாக உதவும். பழங்காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை இந்த நல்லண்ணெய் தேய்த்து  குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அந்த பழக்கம் நாளடைவில் மறைந்து, இன்று தீபாளிகாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.




சரும வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதற்கு இந்த எண்ணெய் குளியல் உதவியாக இருக்கும். சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் குளியல் சிறந்த மருந்தாக இருக்கும். தொடர்ந்து வாராவாரம் எண்ணெய் குளியல் எடுத்து கொண்டிருந்த நாட்களில், சரும பிரச்சனைகள் வராமல் இருந்தது என்ற கதைகள் இருந்து வருகின்றன.




முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், முடி இயற்கையான பொலிவுடன் இருக்கும்.கண்கள் சோர்வாக இருப்பது, கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் இருப்பது, கண்களில் இருக்கும் எரிச்சல் நீங்குவதற்கு நல்லெண்ணெய் குளியல் சிறந்த தீர்வாக இருக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தீபாவளி அன்று நல்லெண்ணெய் குளியல், பாரம்பரிய இனிப்புகள் ஆகியவை பண்டியையைச் சிறப்பாக்குவதுடன், நிறைந்த கொண்டாட்டமானதாகவும் இருக்கும் . ஆரோக்கியமான தீபாவளியைக் கொண்டாடுவோம்.


பிற செய்திகளைப் படிக்க: ABP Nadu தளத்தைப் பின்தொடரவும்