ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுபவர்களில் பொதுவாக இரண்டு வகையானவர்கள் இருப்பார்கள் - முதல் வகையினர் சாப்பிட்டு மீதமான உணவை பேக் செய்வது, மற்றொரு வகையினர், அதிகப்படியான உணவாக இருந்தாலும் அப்படியே அதை ஹோட்டலிலே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.


சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் மீதமான உணவை ஸ்டீல் டப்பாவில் பேக் செய்கிறார். பிளாஸ்டிக் டப்பா, கவர்களில் இல்லாமல் வீட்டிலி இருந்து கொண்டு வந்த டப்பாவில் அவர் அதை எடுத்து சேமிக்கிறார். இதை வீடியோக எடுத்த அவரது மகள் நயனா பிரேம்நாத் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


வீடியோவில், அத்தகைய நடைமுறையை இயல்பாக்குவதே முக்கியமானது என்று அவர் குறிப்பிடுகிறார். வீடியோவுடன், அவர் ஒரு நீண்ட குறிப்பைபையும் பகிர்ந்து கொண்டார், அங்கு அவர் தனது பெற்றோர் ஒரே இரவில் மாறவில்லை, ஏனெனில் இந்த மாற்றங்களைக் காண அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. “இன்று, உணவகத்திற்குச் செல்லும் போதெல்லாம் டப்பாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்று என் அம்மாதான் எனக்கு நினைவூட்டுகிறார். கஃபேக்களில் பயன்படுத்துவதற்காக என் சகோதரி தனது சொந்த ஸ்டீல் ஸ்ட்ராக்களை எடுத்துச் செல்கிறார்” என்று அவர் தலைப்பில் எழுதினார்.






 


"இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாக்கெட் சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்துள்ளார். மேலும், இது மிகவும் ஆடம்பரமான உணவகத்தில் நடந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவரது குறிப்பில், மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு முன்னால் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வெட்கப்பட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். "இப்போது அவர்கள் உங்களை விமர்சித்தாலும், அவர்கள் நிச்சயமாக மாற்றத்தைக் கவனிப்பார்கள், இறுதியில் அது ஒரு பெரிய விஷயமல்ல என்பதை உணர்ந்து அதை அவர்களே செய்யத் தொடங்குவார்கள்," என்று அவர் கூறினார்.


இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. குடும்பத்தினரின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். “இதை முழுமையாக ஆதரிக்கவும்! உணவகங்களில் இருந்து உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்பது ஒரு நல்ல வழி.


மற்றொரு பயனர் எழுதினார், “நம்மில் பலர் வெட்கத்தால் இதைச் செய்ய மாட்டார்கள்.. ஆனால் அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் அதைச் செய்த விதம் பாராட்டுக்குரியது. நாம் அனைவரும் அவ்வாறு செய்வதற்கான தைரியத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம், மேலும் இதுபோன்ற நேர்மறையான செயல்கள் இயல்பாக்கப்படும் .