Baakiyalakshmi : விவகாரத்துக் குறித்து வாய்திறந்த பாக்கியலட்சுமி கோபி.! பரபர திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!

பாக்யலட்சுமி சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய எபிசோட் அதிரடியில் ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்.  

Continues below advertisement

பாக்யலட்சுமி சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய எபிசோட் அதிரடியில் ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்.  

Continues below advertisement

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலெட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறது. இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்ரிங் தொழில் மேற்கொண்டு வருகிறார்.

இப்படி கதைக்களம் நகர்ந்துக்கொண்ட நிலையில் தான் பாக்யலெட்சுமியின் கணவர் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவை 2 வது திருமணம் செய்துக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக நீதிமன்றம் வரை சென்ற நிலையில் பாக்யலெட்சுமி எதுவும் தெரியாமல் இருந்தது ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால் கடந்த  சில தினங்களாக கோபியின் மீது சந்தேகம் கொள்வதுப்போன்றும், மகன் செழியின் அப்பாவின் நடத்தையை தெரிந்துக்கொள்வது போன்று சீரியல் ஒளிப்பரப்பாகிவருகிறது.


இந்நிலையில், பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் அதிரடியாக இருக்கிறது. இதன் ப்ரோமோவைப் பார்த்தே ரசிகர்கள் எப்போ சீரியல் வரும் எனக் காத்திருந்தனர்.

இன்றைய எபிசோடில் நடக்கப்போவது இதுதான். கோபி, இனியா, பாக்கியா 3 பேரும் அவரது பள்ளிக்கு சென்று 11 ஆம் வகுப்பிற்கு பணம் கட்டுகின்றனர். அப்போது பாக்கியா, மகள் இனியாவின் தோழிகளிடம் இயல்பாக பேசுகிறார். தனக்கே உரித்தான வெள்ளந்தி மனத்துடன் இனியாவின் தோழிகளிடம் சில தெரியாத கேள்விகளை கேட்கிறார். இதனால் கோபம் அடைந்த இனியா அம்மாவிற்கு எதுவும் தெரியவில்லை என தனத தந்தையிடம் முறையிடுகிறார்.

உடனே கோபி இனியாவை சமாதானப்படுத்துகிறார். தந்தையும், மகளும் பாக்கியாவை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் அப்பாவும், மகளும் மட்டும் வெளியே சாப்பிடச் செல்கிறார்கள். 

அப்போது கோபி அம்மாவை விவாகரத்து செய்துவிட்டால் என்ன செய்வாய்? யாருடன் இருப்பாய்? என இனியாவிடம் கேட்கிறார்.

முதலில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த இனியா, பின் நான் உங்களுடன் தான் எப்போதும் இருப்பேன் எனக் கூறிவிடுகிறார். இதனால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வில் திளைக்கும் கோபி கொஞ்சம் சமாளித்து இதை நான் சும்மா தான் கேட்டேன் எனக் கூறிவிடுகிறார்.

இனியா சொன்னதை கேட்டு சந்தோஷத்தில் இருக்கும் கோபி அடுத்தகட்டமாக என்ன செய்வார் என பெரிய கேள்வி எழும்புகிறது. அதோடு எழிலும் அமிர்தாவிடம் தனது காதலை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Continues below advertisement