புளி மற்றும் பசலைக் கீரை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்குகிறது.  புளியின் குறிப்பிடத்தக்க பண்புகள் மலேரியா,மஞ்சள் காமாலை மற்றும் நீரிழிவு நோய், ஸ்கர்வியை எதிர்த்துப் போராட உதவுவதாக கூறப்படுகிறது. பசலைக் கீரையில் உள்ள ஊட்டச்சத்து ஆற்றல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இந்த கீரை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.


மலேரியாவிலிருந்து விடுவிக்கிறது


இந்தியாவில், சுற்றுச்சூழல் சுகாதாரங்கள் குறைவாக உள்ளன. தண்ணீர் தேங்கி இருப்பதால், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளன. புளி இலைச் சாறுகள் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இது மலேரியாவிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. 


நீரிழிவு நோயைக் குணப்படுத்துகிறது


துரதிர்ஷ்டவசமாக, உலகளாவிய நீரிழிவு மையமாக இந்தியா திகழ்கிறது. நீரிழிவு நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. உடல் இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறும்போது வகை 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதேசமயம் உடல் சரியான செயல்பாட்டிற்கு போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது வகை 2 நீரிழிவு ஏற்படுகிறது.  புளி இலைகளின் கலவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. புளி இலைகள் மஞ்சள் காமாலைக்கு திறம்பட சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


ஸ்கர்வி சிகிச்சைக்கு உதவுகிறது


வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோயை குணப்படுத்த புளி பயனுள்ளதாக உள்ளதாக கூறப்படுகிறது.  ஈறுகள் மற்றும் நகங்களில் இரத்தப்போக்கு, அத்துடன் சோர்வு போன்றவை ஸ்கர்வியின் அறிகுறிகல் ஆகும். புளியின் அதிக அஸ்கார்பிக் அமிலம் ஸ்கர்வியை போக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. 


நீரேற்றத்தை அதிகரிக்கிறது


நீங்கள் பொதுவாக நீர் மற்றும் பிற பானங்களைப் பருகுவதன் மூலம் உடலில் நீரேற்றத்தை தக்கவைக்கலாம்.  உங்கள் தினசரி நீரேற்ற தேவைகளுக்கு கீரை, அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறி உள்ளிட்ட உணவுகள் முக்கிய பங்களிக்கும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் அதைச் சேர்த்துக்கொள்வது உடலை  நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது H2O இன் கூடுதல் ஆதாரத்தை வழங்கும்.


ரத்த சோகையைத் தடுக்கிறது


பசலைக் கீரை சைவ உணவின் இரும்பு சத்தின் ஆதாரமாக செயல்படுகின்றது.  இது இரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவும் ஒரு முக்கியமான கனிமமாகும். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும்  இது பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.


வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு


கீரையில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்பு வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் நோயை உண்டாக்கும் காரணிகளுக்கு எதிராக செயல்பட்டு உடலை பாதுகாப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.