Creamy & Juicy Paneer Toastie: பிரெட் டோஸ்ட் க்ரேவிங்கா? க்ரீமி பனீர் டோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது?

Creamy & Juicy Paneer Toastie: க்ரீமி ப்ரெட் டோஸ்ட் செய்வது எப்படி என கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

பிரெட் டோஸ்ட், பிரெட்ல சாண்ட்விட் சாப்பிடுவது எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. குழந்தைகளுக்கும் பிரெட் பிடிக்கும். மைதா மாவு வைத்து செய்யப்படும் பிரெட் தவிர்க்க வேண்டும் என்பவர்கள் கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். இருப்பினும், அடிக்கடி பிரெட் சாப்பிட வேண்டாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாலை நேர உணவாக கூட பிரெட் பயன்படுத்தி ஏதாவது குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

Continues below advertisement

என்னென்ன தேவை?

பிரெட் - தேவையான அளவு

பனீர் - ஒரு கப்

ப்ரெத் க்ரீன் -  ஒரு கப் (250 கிராம்)

வெண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - 1

சோயா சாஸ், Schezwan sauce - 1 டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்

மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - ஒரு ஸ்பூன்

தண்ணீர்- சிறிதளவு

செய்முறை 

முதலில் பனீர் கிரெவி தயார் செய்ய வேண்டும். அதற்கு கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். இதோடு சோயா சாஸ்,Schezwan சாஸ் சேர்த்து வதக்க வேண்டும். இதோடு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்க வேண்டும். உப்பும் சேர்த்து அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்.இதை நன்றாக கொதித்ததும், பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்களுக்குப் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். ஸ்டஃபிங்க் ரெடி. 

அடுத்து பிரெட்களை வெண்ணெயில் டோஸ்ட் செய்து எடுத்துகொள்ளவும். இப்போது சூடா பிரெட் மீது பனீர் துண்டுகளை வைத்து கொத்தமல்லி தூவினால் க்ரீமி பனீர் டோஸ்ட் ரெடி. 

பிரெட் வைத்து ஏராளமான உணவுகளை செய்யலாம். ஃப்ரெஞ்ச் டோஸ்ட், ப்ரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளையும் செய்து கொடுக்கலாம். 

இதே செய்முறையில் பூண்டு, முட்டை வைத்து பிரெட் டோஸ் செய்யலாம். அதற்கு ஒரு கப அளவிற்கு பூண்டை சில்லி ஃப்ளேக்ஸ் உடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் பேக் செய்தும் பயன்படுத்தலாம். இதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் கலவை தயாரானதும் ஆம்லெட் செய்ய வேண்டும். பின்னர், பிரெட் டோஸ்ட் செய்து அதன் மீது பூண்டை மசித்து வைக்கவும். அதோடு ஆம்லெட் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 


மேலும் வாசிக்க..

Bread Chilli:காரசாரமான சில்லி பிரெட்... இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்..

Bread Cheese Bite :மழைக்கு இதமா ஒரு ஈசி ஸ்நாக்.. பிரெட் சீஸ் ரெசிபி...செய்முறை இதோ..

Continues below advertisement
Sponsored Links by Taboola