குளிர்காலம் வந்துவிட்டால் கூடவே உடல்நல குறைபாடுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சளி, இருமல் அடிக்கடி ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டும்மல்லாமல், உடலும் வானிலை மாற்றத்தின் சொல்பேச்சைத்தான் கேட்கும். நாள் முழுக்க இருமிட்டே இருக்க வேண்டியிருக்கும். ஆபிஸ் சென்றால் ஏ.சி. குளுரும். என்னடதான் மாத்திரை மருந்து என்றாலும், உடம்பு உடனடியாக சரியாகிவிடாது. இப்படி நிறைய சொல்லலாம். உடநல குறைவு என்றவுடன் டாக்டரிடம் சென்றால் மருந்து சாப்பிடனுமேன்னு கவலையா? விடுங்க. இதோ வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே சளி, இருமலை சமாளிக்கலாம். பனிக்காலத்தில் உடல்நலத்தைப் பாதுகாக்க வீட்டு வைத்தியம் இருக்கிறது. என்னென்ன வழிமுறைகள் என்று இக்கட்டுரையில் பார்க்கலாம். 


இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்தது. உடலுக்கு ஏற்படும் பலவகை பிரச்னைகளை சரிசெய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உணவு முறையே மருந்தாக அமைகிறது என்பதை பலர் சொல்லி கேட்டிருப்போம் இல்லையா. ஆமாம். இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். 


அதிமதுரம், பெருஞ்சீரகம், சீரகம், வெந்தயம், மிளகு, கிராம்பு, பட்டை,இஞ்சி, சுக்கு, திப்பிலி உள்ளிட்டவற்றை சளி, இருமலுக்கு இவற்றை பயன்படுத்தி கசாயம் வைத்து குடிக்கலாம். கற்பூறவள்ளி, துளசி போன்றவைகள் சளி, இருமல் குணமாக நல்ல மருந்தாக இருக்கும் என்று சொல்கின்றனர். குறிப்பாக, சளி, இருமல் பிரச்னைக்கு அதிமதுரம் சிறந்த தீர்வைத் தருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


அதிமதுரத்தின் நன்மைகள்: 


அருஞ்சுவைகளில் இனிப்பு எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்காது. அதிமதுரத்தைச் சுவைத்துப் பாருங்கள். இனிப்பே வெவ்வேறு சுவையாக இருக்கும். அதிமதிரம் வேர் இருமல் சளி, இருமலுக்கு நல்ல மருந்து. வித்தியாசமான இனிப்புச் சுவையை இதில் உணரலாம். அதிமதுரத்தைச் சாப்பிடவுடன், அந்த இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நீடித்திருக்கும்.  எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும். இதை நீரில் ஊறவைத்து, கொதிக்க வைத்து அந்த சாறை குடிக்கலாம். கசாயம் வைக்கும்போதும், இதை ஒரு பொருளாக செய்து கொள்ளலாம்.  இதோடு பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருகலாம்.  பனங்கற்கண்டு இருமலுக்கு நல்லது. 


சீரகம் 


சீர்+அகம்= சீரகம். இது செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. சளி,இருமல் உள்ளிட்ட உடல்நிலை சரியில்லாத நேரங்களில் செரிமான சக்தி குறைந்துவிடும். அதனாலேயே, உடம்பு சரியில்லாதபோது, நாம் தனியாக ஒரு டயட் ஃபாலோ செய்வோம். அப்படியான நேரத்தில், சீரக தண்ணீர் அருந்தலாம். உடலுக்கு திறனை அளிக்கும் வல்லமை சீரகத்திற்கு உண்டு. 


துளசி தேநீர்:


துளசி தேநீர்  உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் கொஞ்சம் இஞ்சியும், தேனும், எலுமிச்சையும் சேர்த்து அருந்தினால் அதன் ருசியே தனி. ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அதில் சில துளசி இலைகளையும், இஞ்சியையும் சேர்க்கவும். வாசனைக்காக கொஞ்சம் ஏலக்காய் சேர்க்கலாம். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். தண்ணீர் அரைக் கப் ஆக குறையும் வரை கொதிக்க விடவும்.  துளசி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்தால் சுவையும் அட்டகாசமாக இருக்கும். சளி, இருமல் காலத்தில் குடிப்பதாகவும் இதமாக இருக்கவும். 


மிளகு, சித்தரத்தை, வெற்றிலை, கற்பூரவள்ளி, துளசி உள்ளிட்டவற்றை கொண்டு கொதிக்க வைக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.