பாலியல் உறவின் போது, ஆணுறை அணிவது பல்வேறு விதங்களில் பயனளிக்கிறது. திட்டமிடாத கருத்தரிப்பைத்தவிர்ப்பது முதல், பால்வினை நோய்கள் பாதிப்பை தடுப்பது வரை ஆணுறைகள் பயன்படுகின்றன. விறைப்பு நிலையில் உள்ள ஆணுறையை சரியான முறையில் அணிந்து பாலுறவு கொள்ளும் போது, விந்தணு பெண்ணின் உடலில் செல்லாமல் ஆணுறை தடுக்கிறது. இது மிகவும் சுலபமான கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு கொள்வதற்கு கருவியாக செயல்பட்டு வருகிறது. ஆணுறைகளில் தற்போது பல வகை மற்றும் பிராண்டுகள் வந்துவிட்டன. நமக்கு பொருந்துவதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் யாருக்கு எந்த ஆணுறை சரியாக பொருந்துகிறது என்று எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கான ஆணுறையை தேர்ந்தெடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.


ஆணுறைகளில் சைஸ் வித்தியாசங்கள் உண்டு. அதற்கேற்றாற்போல் ஆணுறைகளை வாங்கி பயன்படுத்தினால் உடலுறவின்போது வசதியாகவும், சங்கடம் இல்லாமலும் இருக்கும். அதனை தெரிந்து கொள்வதற்கு ஆணுறுப்பின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை அளப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.



அந்தரங்க உறுப்பில் அளக்கும் டேப்பின் ஒரு பக்கத்தை பிடித்து, ஆண்குறியின் நுனி வரை அளவிடவும். அகலத்தை அளக்க மென்மையான அளவிடும் டேப்பை பயன்படுத்தி ஆண்குறியின் தடிமனான பகுதியை மெதுவாக சுற்றி வைத்து அளக்கவும். இந்த இரு அளவுகளும் ஆண்குறி எரக்ஷன் ஆனதற்கு பிறகான அளவீடுகளாக இருத்தல் வேண்டும். இந்த இரண்டு அளவீடுகளையும் பெற்றவுடன் இதற்கு நெருக்கமாக பொருந்தக்கூடிய ஆணுறையை தேர்வு செய்ய வேண்டும். ஆணுறை பெரும்பாலும் ஆடைகள் அளவு போன்று கிடைக்கிறது. மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது. பெரிய அளவு, சிறிய, நடுத்தர அளவில் கிடைக்கின்றது. ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும் என்பது ஆணுறையில் கிடையாது. ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உங்கள் நீளம் மற்றும் அகல அளவீடுகளை மனதில் கொண்டு வாங்குங்கள்.



ஆணுறை அகலத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இறுக்கமான ஆணுறை உடலுறவின்போது சங்கடம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம், அதிலுள்ள மற்றொரு ஆபத்து, எளிதில் கிழிந்து போகலாம். ஆணுறை அகலத்துக்கு இந்த குறிப்புகளை பின்பற்றவும். நடுத்தர ஆணுறைகளின் அகலமானது - 1. 75 முதல் 2 அங்குலம் வரை இருக்கும். சிறிய ஆணுறைகள் -1.75 அங்குலத்துக்கு குறைவான அகலம் கொண்டிருக்கும். பெரிய ஆணுறைகளின் அகலம் - 2அங்குலத்துக்கு மேல் இருக்கும். ஆணுறை முழு ஆணுறுப்பையும் மூடி விந்து வெளியேறும் இடத்தில் மட்டும் சிறிய இடைவெளி விட வேண்டும். ஆணுறை நீளத்துக்கு இந்த குறிப்புகளை பின்பற்றவும். பொதுவாக பயன்படுத்தப்படும் நடுத்தர ஆணுறைகளின் நீளமானது - 7.25 முதல் 7.8 அங்குல நீளம் வரை இருக்கும். சிறிய ஆணுறைகள் -7 அங்குலம் முதல் 7. 8 வரை நீளம் கொண்டவை. பெரிய ஆணுறைகளின் நீளம் - 7.25 முதல் 8.1 அங்குலம் வரை இருக்கும்.



ஆண் உறுப்பின் அளவுக்கு பொருத்தமான ஆணுறை பிராண்டுகள் நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு இந்த குறிப்புகளையும் மனதில் கொண்டு தேர்வு செய்யலாம். ஆணுறை பொருள்கள் லேடெக்ஸ், பாலியூரிதின், பாலிசோபிரீன் மற்றும் ஆட்டுக்குட்டி தோல் என பல்வேறு பொருள்களால் செய்யப்பட்டிருக்கும். இதில் பல வகை ஆணுறைகளை முயற்சிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதன்மூலம் உங்களுக்கு வசதியான ஒன்றை தேர்வு செய்யலாம். ஆணுறைகள் வெவ்வேறு அமைப்புகளிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன. உங்கள் துனைக்கு உணர்திறன் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வடிவங்களை நீங்கள் தேருவ் செய்யலாம். டபுள் எலாஸிட்டி காண்டம், லைஃப்ஸ்டைல்ஸ், டர்போ காண்டம் என பல ஆணுறை பிராண்டுகள் லீப்ரிகண்ட் பயன்படுத்துகின்றனர். இது உங்கள் துணையின் மகிழ்ச்சியை மேம்படுத்த செய்யும். தேவையெனில் ஆணுறையில் லூபிரிக்கன்ட் எண்ணெய் சேர்க்கலாம். ஜெல்லி போன்ற மசகு எண்ணெயை ஆணுறையை அணிந்த பிறகு அதன் வெளிப்புறத்தில் தடவலாம். லேடெக்ஸ் ஆணுறை பயன்படுத்தினால் நீர் அல்லது சிலிகான் அடிப்படையிலான லூப்ரிகண்ட் தேர்ந்தெடுக்கலாம். எண்ணெய் சார்ந்த லூப்ரிகண்ட் கொண்ட ஆணுறையில் லேடெக்ஸ் அடிப்படையில் ஆன லூபிரிகன்ட் சேர்க்கலாம். ஆணுறையில் அதிக லூபிரிக்கன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் ஆணுறுப்பை விட்டு நழுவி போகவும் வாய்ப்புண்டு… ஜாக்கிரதை!