பொதுவாக மேக்கப் என்பது பெண்களுக்கு மட்டும் உரித்தான விஷயம் என்று இருந்த காலகட்டம் கடந்து இன்று ஆண்களும் மேக்கப் போட்டுக் கொள்வதற்கும் தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும் நிறைய நிறைய நேரத்தை செலவழிக்கிறார்கள். மேலும் பெண்கள் எல்லா நேரங்களிலும் மேக்கப் போட்டுக் கொள்ள தங்களை அழகுபடுத்திக் கொள்ள பார்லருக்கு போகக்கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கும் இல்லையா? அத்தகைய நேரங்களில் என்ன செய்வது என்பதை பற்றி  காணலாம்


சில பெண்களுக்கு முகத்தில் மிக மெல்லிய முடிகள் நிறைந்து காணப்படும். இவற்றை வேக்சிங் மற்றும் த்ரெட்டிங் மூலமே எடுக்க முடியும். இன்னும் சிலர் அத்தகைய முடிகளை ஷேவ் செய்தும் எடுக்கிறார்கள்.


இதற்கு இரண்டு வகையான தீர்வுகளை நாம் எடுக்கலாம். ஒன்று நிரந்தர தீர்வாக அதற்குரிய வழிகளை கையாள்வது. தற்காலிக தீர்வாக கன்சீலர் மற்றும் பேஸ் பவுண்டேஷன் ஆகியவற்றை பயன்படுத்துவது.


நிரந்தரமாக முகத்தில் இருக்கும் முடியை அகற்றுவதற்கான வழிகள்:


மஞ்சள்,முடி வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதில்  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  கற்றாழை ஜெல்லில் மஞ்சளை கலந்து பேஸ்ட்போல தயார் செய்து கொண்டு, முகத்தில் தேவையற்ற முடி வளர்ந்த பகுதிகளில் தடவவும். பேஸ்ட் காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி வளர்ச்சி குறையும். (உங்களுக்கு மஞ்சள் ஒத்துக்கொள்ளுமா என்பது Patch சோதனை செய்து தெரிந்துகொண்டு பயன்படுத்துங்கள்)


தேன் பயன்படுத்துங்கள்:


அதிகப்படியாக முடி வளர்ந்து இருக்கும் இடத்தில் தேனை பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை சுத்தம் செய்யுங்கள் நாளடைவில் அந்த இடங்களில் முடி வளர்வது குறைய ஆரம்பிக்கலாம்.


பால், கடலை மாவு கலந்து பயன்படுத்துங்கள்:


 பால், கடலை மாவு கலந்து முடி அதிகம் வளர்ந்திருக்கும் பகுதிகளில் பூசி, ஸ்க்ரப் செய்து வாருங்கள் நாளடைவில் இந்த முடியானது குறைய தொடங்கலாம். 


கோதுமை மாவு மற்றும் பப்பாளியை பயன்படுத்துங்கள்


கோதுமை மாவினை கொண்டு முகத்தில் இருக்கும் முடியினை அகற்றுவது பழங்காலத்திலிருந்து வரும் நடைமுறையாகும். சிறிதளவு கோதுமை மாவினை எடுத்து,முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் பூசுவதினால் மெதுவாக முடி உதிர்தலை ஊக்குவித்து,முடி வளர்ச்சியைத் தடுக்கலாம். பப்பாளியில் இயற்கையாக முடியை அகற்றும் என்சைம்கள் உள்ளன. எனவே பப்பாளியைத் தவறாமல் உங்கள் சருமத்தில் முடி உள்ள இடத்தில் உபயோகிப்பதால்,முடிகள் அகன்று விடும். ஆனால் இதற்கு நாட்கள் எடுத்துக் கொண்டாலும் கூட முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.


கடலை மாவு மற்றும் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்துங்கள்:


முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் கடலைமாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து நன்றாக குழைத்து,சர்க்கரை சேர்த்து கலந்து, போல் தயார் செய்து கொள்ளுங்கள். இதை முடியிருக்கும் சுற்றிலும் நன்றாக தடவி ஒரு மணி நேரம் ஊற விடுங்கள்.இது காய்ந்ததும் அப்படியே மெதுவாக எடுக்கும் போது, பேஸ்ட்டோடு ஒட்டியிருக்கும் முடியும் உடன் வரும்.கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து, ஸ்கிரப் செய்தால் சருமத்தில் உண்டாகும் வலி, எரிச்சல் நீங்கும்.தொடர்ந்து வாரம் இருமுறை இப்படி செய்துவந்தால் முடி வளர்வது படிப்படியாக கட்டுக்குள் வரலாம்.


தற்காலிக தீர்வாக இருக்கும் கன்சீலர் மற்றும் பிரைமரை பயன்படுத்துங்கள்:


பியூட்டி பார்லர் செல்ல முடியாத நேரங்களில், வேக்சிங் அல்லது த்ரெட்டிங் செய்ய முடியாத போது, உங்கள்  வீட்டில் இருக்கும்  கன்சீலர் மற்றும் ப்ரைமர் பயன்படுத்தி முகத்தில் இருக்கும் மெல்லிய முடிகளை மறைத்திடுங்கள். கன்சீலர் பொதுவாக, முகத்தில் உள்ள கறைகளை மறைக்க ஒப்பனையில் பயன்படுத்தப்படுகிறது. முடிகளை தற்காலிகமாக மறைப்பதற்கு, கன்சீலரை முகத்தின் முடியில் தடவவும். கன்சீலரை தனியாக அல்லது அடித்தளத்துடன் பயன்படுத்தலாம். இது திரவம், கிரீம், குச்சி, பென்சில் மற்றும் தூள் போன்ற பல்வேறு வடிவங்களில் வருகிறது.


ப்ரைமர் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.மேலும் குறைபாடற்ற தோற்றத்தை அளிக்கிறது.மேக்கப்பின்போது முகத்தில் ப்ரைமரைப் பயன்படுத்திய பிறகு, ஃபவுண்டேஷன் அல்லது கன்சீலரைப் பயன்படுத்துவது கூடுதலாக முகத்தில் இருக்கும், முடியை மறைக்கும்.