தொண்டை கரகரப்பு, சளி ஆகியவை ஏற்பட்டால் கிராம்புகளை மெல்ல அறிவுறுத்தப்படுவது இயல்வு. கிராம்பைப் போலவே, கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவதும் பல் வலிக்கு மருந்தாக அமையும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வீட்டில் தேநீர் செய்யும் போதும், அதில் கிராம்புகளை சேர்ப்பதும் வழக்கம். 


இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கிராம்புகள் ஆண்களின் உடல்நலனில் பெரும் நன்மையைச் செய்வதோடு, பல்வேறு உடற் பிரச்னைகளையும் சரி செய்கின்றன. கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் சுரப்பதற்கும் உதவி செய்கிறது. மேலும், விந்தணுக்களின் எண்ணிக்கையிலும் இது உதவி செய்கிறது. கிராம்பு பயன்படுத்துவது செரிமானத்திற்கும், நீரிழிவு நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 



கிராம்பு எண்ணெய் பயன்படுத்தும் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்:


1. ஆண்மைக் குறைவு ஏற்படாமல் தடுக்கிறது


பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பெரிதும் பயன்படுகிறது கிராம்பு எண்ணெய். மேலும், ஆண்மைக் குறைவில் இருந்து மீளவும் கிராம்பு எண்ணெய் பயன்படுகிறது. 


2. டெஸ்டோஸ்டீரோன் அளவுகளை அதிகரிக்கிறது


கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவது டெஸ்டோஸ்டீரோன் அளவுகளை ஆண்களின் உடலில் அதிகரிக்கிறது. மேலும் பாலியல் ஆசையையும் இது தூண்டுகிறது. 


3. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது


பல்வேறு வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதங்கள், பிற சத்துகள் ஆகியவை கிராம்பு எண்ணெயில் சேர்த்திருப்பதால் அது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் விந்தணுக்கள் வேகமாக நகர்வதற்கும் இது பயன்படுகிறது. 


4. புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட பயன்படுகிறது


கிராம்பு எண்ணெய் சேர்க்கப்பட்ட வெந்நீரில் தொடர்ந்து குளித்து வந்தால், அது மனதை அமைதிப்படுத்துவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவுகிறது. 



5. விந்து விரைவில் வெளியேறுவதைத் தடுக்கிறது 


கிராம்பு எண்ணெய் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இதன்மூலம் மன அழுத்தத்தில் இருந்து விலக முடிவதோடு, உடலில் ஆற்றல் அதிகரித்து, விந்து விரைவில் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது.  


6. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது


கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தவும் கிராம்பு எண்ணெய் பயன்படுகிறது. 


7. நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது


கிராம்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.