Watch video : 'துள்ளாத மனமும் துள்ளும்' பார்ட்- 2 இது... விஜய், சிம்ரனாக உருமாறி நடிப்பில் அசத்திய சிறுவர்கள்!

துள்ளாத மனம் துள்ளும் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் பெரும் ஹிட்டான படங்களில் துள்ளாத மனமும் படத்திற்கு பெரும் இடம் இருக்கிறது. இயக்குநர் எழில் இயக்கியிருந்த இப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்த இப்படம் 1999ஆம் ஆண்டு வெளியானது.

Continues below advertisement

குட்டி, ருக்கு என்ற இரண்டு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு இன்றுவரை ஃபேவரைட்.குட்டி கதாபாத்திரத்தில் காதல், ஆக்‌ஷன், சென்ட்டிமெண்ட் ஆகிய காட்சிகளில் விஜய் நடித்து துள்ளாத மனமும் துள்ளும் படத்தை ஒரு க்ளாசிக் படமாக அமைந்தது. 

ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்த இந்த திரைப்படம் விஜய்க்கு இன்றளவும் பெரிதாக பேசப்படும் திரைப்படமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் இசையும்தான்.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் கதை நகர்ந்து இறுதிக்கட்டத்தில் படம் விறுவிறுப்பை பெறும். இந்த படத்தில் வரும் இறுதிகட்ட காட்சிகள் பார்ப்போரை இன்னும் கண்கலங்க வைத்து, சீக்கிரம் இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வை கடவுளே என்று கதறும் அளவுக்கு அருமையான காட்சிகள் இடம் பெற்று இருக்கும். 

 

இந்தநிலையில், துள்ளாத மனம் துள்ளும் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக வைகை புயல் வடிவேலு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார். அந்த பாத்திரத்திற்கு வடிவேலு சரியாக இருப்பார் என நினைத்து அவரிடம் எழில் கதை கூறினார். கதையை கேட்ட வடிவேலுவுக்கு கதை பிடித்துப்போக இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் அவரை தடுத்தது. 

இந்த சூழலில் படத்தை தயாரிக்க முன்வந்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தன்னிடம் விஜய்யின் தேதி இருப்பதாகவும், அவருக்கேற்றவாறு கதையை மாற்றி காட்சிகள் எழுத எழிலிடம் கோரிக்கை வைத்தார்.வடிவேலுவுக்காக எழுதப்பட்டிருந்த துள்ளாத மனமும் துள்ளும் கதையில் காமெடி தூக்கலாக இருந்தது. விஜய்க்காக கதையிலும், காட்சிகளிலும் சிறிய மாற்றத்தை செய்து உணர்வுப்பூர்வமான் காட்சிகளை அதிகப்படுத்தினார்.  இதனையடுத்து, விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் எடுக்கப்பட்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

Continues below advertisement