Congestive Heart Failure: இதய செயலிழப்பு என்றால் என்ன? தடுப்பது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இதய செயலிழப்பு:


இருமல் ஒரு நுரையீரல் பிரச்சனை என்று பலர் கருதுகின்றனர். ஆனால், நீண்டகால இருமல் காரணமாக இதயப் பிரச்சனைகள் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அதிக இருமல் காரணமாக இதய செயலிழப்பு (CHF) ஏற்பட வாய்ப்புள்ளது. இதய பிரச்னைகளுடன் இருமல் இணையும்போது CHF ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்வது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.   


இதய செயலிழப்பு என்றால் என்ன?


இதயம் ரத்தத்தை சரியாக உந்தித்தள்ள முடியாதபோது இதய செயலிழப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய வால்வு நோய் காரணமாக அறியப்படுகிறது. இதய தசையின் மோசமான செயல்பாடு காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சில நேரங்களில் நுரையீரலில் இருந்து இதயத்திற்கு ரத்தம் திரும்பும் போது கடுமையான இருமல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் இதய செயலிழப்பும் ஏற்படுகிறது. கரோனரி தமனி நோய் (CAD), மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கார்டியோமயோபதி, இதய வால்வு பிரச்சினைகள் மற்றும் பிறவி இதய குறைபாடுகள் ஆகியவற்றாலும் இதய செயலிழப்பு ஏற்படலாம். 


இதய செயலிழப்பு அறிகுறிகள்:


1. இதய பிரச்னைகள், தீவிர இருமல், குறட்டை, சுவாசிப்பதில் சிரமம். நிலை மோசமடைந்தால், வாயிலிருந்து நுரை மற்றும் ரத்தம் வரும் 


2. படுத்து உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது சுவாசிப்பதில் சிரமம்  


3. வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு ரத்தம் தோய்ந்த சளி இருமல் 


4. நுரையீரலில் திரவம் படிதல், கால்கள், கணுக்கால், வயிறு வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு 


5. ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறன் குறைவதால் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது  


6. இதயத் துடிப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஏற்படும்  


7. வேலை செய்யும் போது மிகுந்த அழற்சி ஏற்படுவது 


8. ஓய்வெடுக்கும் போது இதயம் அதிகமாக துடிப்பது


9. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் மறதி மற்றும் கவனம் குறைகிறது  


10. பசியின்மை மற்றும் சலிப்பு


இதய செயலிழப்பு சிகிச்சை:



1. உணவுப் பழக்கம்: சோடியம் குறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உண்ணுங்கள். முடிந்தவரை உப்பை குறைவாக உட்கொள்ள வேண்டும். 


2. உடற்பயிற்சி செய்யுங்கள்: இதய செயலிழப்பைக் குறைக்க உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது.


3. மருத்துவ சிகிச்சை: இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிக்கலை முன்கூட்டியே கண்டறிவது சிகிச்சையை எளிதாக்குகிறது.