உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பண்டிகை வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ண வண்ண விளக்குகளும், கிறிஸ்துமஸ் மரம், இனிப்புகள், குடில், பரிசுப்பொருள்களும்தான். வீதிகளிலும், அனைத்து வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்புகள் கண்களைக்கவரும். மேலும் கிறிஸ்துமஸ் நாள்களில் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து மகிச்சியாக கொண்டாடுவார்கள்.


ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். நம் ஊரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பனிப்பொழிவு மற்றும் கிறித்துமஸ் மரங்கள் இல்லை என்றாலும், செயற்கையான மரங்கள், நம் ஊரில் வளரும் கிறிஸ்துமஸ் மரங்களை  வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடத்தை சிறப்பாக்குவோம் இல்லையா? ஆனால், கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடுகளில் உண்மையில் அதன் பாரம்பரிய முறைப்படி எப்படி கொண்டாடப்படும்? பனிப்பொழிவுடன் வண்ண வண்ண விளக்குகளுடன் அந்தக் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும்.  நீங்கள் கிறிஸ்துமஸ் நேரத்தில் பயணம் மேற்கொள்ள திட்டம் இருந்தால், நிச்சயம் நீங்கள் சுற்றுப் பார்க்க வேண்டிய நகரங்களின் லிஸ்ட் பற்றி கீழே காணலாம். 




சென்னை


தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும். மெரீனா கடற்கடை, சாந்தோம் பேராலயம், வணிக மால்கள், செயின்ட் தாமஸ் பேராலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் வண்ண விளக்குகளுடன் நட்சத்திரங்கள் மின்ன கொண்டாட்டங்கள் இருக்கும். விழாவினை உற்சாகத்துடன் கொண்டாட இது சிறந்த இடம்.


வேளாங்கண்ணி :


வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழா களைக்கட்டும். நூர் நகரம் என்றும் அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் சிகப்பு தொப்பி அணிந்து பலரும் ஊர்வலம் செல்வர். பிரார்த்தனை செய்வார்கள்.கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலம் நடக்கும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் இருக்கும். குடும்பத்துடன் பக்தியுடன் புதிய ஆண்டை வரவேற்கலாம்.இயேசு பிறந்தநாளில் ஆசீர்வதாத்துடன் கொண்டாட வேளாங்கண்ணிக்கு செல்லலாம்.


கோவா


சிலருக்கு கொண்டாட்டம்; ஜாலியாக சுற்றுலா செல்லலாம். கடற்கரை என்று சொன்னால், கோவா நினைவுக்கு வரும். கோவாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவாவில் மிகவும் தனித்துவமாக சிறப்பாக இருக்கும். கோவாவில் கிறஸ்துமஸ் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே பல்வேறு விழாக்கள் தொடங்கிவிடும். பேராலயங்களில் பிரார்த்தனை, மின் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் வகை வகையான உணவுகள், கேக்குகள் என்று இருக்கும். 




கேரளா: 


கடவுளின் தேசமான கேரளா இயற்கை கொஞ்சும் அழகோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக்கட்டும். தலசேரி பிரியாணி, வண்ண விளக்குகளின் நம்பிக்கை ஒளியில் எல்லா பேராலயங்களிலும் பிரார்த்தனை நடக்கும். குடும்பத்தோடு கொண்டாடலாம்.


ஹேப்பி கிறிஸ்துமஸ்... அன்பர்களே!!