உருளைக்கிழங்கு சிப்ஸ், எண்ணையில் அதிக நேரம் பொரித்த உணவுகள், பேக்கரி உணவுகள், பதப்படுத்த பட்ட உணவுகள் ஆகியவை சிறுநீரக நோய், நீரிழிவு நோய், உடல் பருமன், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை  தருகின்றன


ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்த பட்ட ஆராய்ச்சியில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக வெப்ப நிலையில் சமைத்த உணவுகள், பேக்கரி உணவுகள் ஆகிய வற்றில்  (Advanced Glycation End - AGEs) மேம்பட்ட கிளைசேஷன் எண்ட் தயாரிப்புகள் சேர்க்கப்படுகிறது. இந்த இரசாயனங்கள் ரோஸ்ட், ஃபிரை, க்ரில் மற்றும் பேக்கிங் செய்யப்படும் பொருள்களுக்கு சுவையும், நறுமணத்தையும் தருகிறது.


இந்த AGE-க்கள் மெயிலார்ட் எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இதனால் நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது. உலகளவில் 10 % மக்கள் சிறுநீரக பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆராய்ச்சியை பற்றி மோனாஷ் மத்திய மருத்துவ பள்ளியின் நீரிழிவு துறையின் இணை பேராசிரியரும் முன்னணி எழுத்தாளருமான மெலிண்டா கோக்லன் கூறுகையில், இந்த உணவுகள் குடலின் கீழ் பகுதியில் இறங்கி, குடல் பாக்டீரியாக்களுக்கு உணவாக  இருக்கிறது. குடல் பாக்டீரியாக்கள் இதை புளித்து வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.




பதப்படுத்த பட்ட உணவுகள் அதிகமாக உட்கொள்வதால், குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, நாட்பட்ட சிறுநீரக நோய்கள், உயர் இரத்த அழுத்தம் , வளர்சிதை மாற்றம், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடுகள், புற்றுநோய்  போன்ற பிரச்சனைகள் வரும்.


என்ன உணவுகளை தவிர்க்கவேண்டும்.?


பதப்படுத்த பட்ட உணவுகள், அதிகமாக செயற்கை இனிப்பூட்டப்பட்ட உணவுகள், பேக்கிங் முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், எண்ணையில் பொரித்த உணவுகள், அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படும் உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.




என்ன உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் ?


காய்கள், பழங்கள், ஓட்ஸ் , மற்றும் பால் மற்றும் பால் பொருள்கள் , மற்றும் தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நன்றாக வளரவும் ப்ரோபையோடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


ஏற்கனவே இந்த  பிரச்சனையால் அவதிப்பட்டால் என்ன செய்யவேண்டும்?




நோய்களுக்கான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அவசியம். மற்றும் வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, கழிவு நீக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவற்றை  செய்யலாம்.


எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.  முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவது, பழங்கள் சாப்பிடுவது, வீட்டில் செய்த சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வது, சிறந்த மாற்றாக  இருக்கும்