Children's Day 2024: நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி (14.11.2024) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி  குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் ’குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் என்றல் நேருவிற்கு ரொம்பவே பிடிக்கும். அவர்களிடம் நேரு மிகுந்த அன்புடன் இருப்பார் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தெரிவிக்கும் கருத்து. நேருவின் பிறந்தநாள், குழந்தைகள் நலன், உரிமைகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 


நேரு குழந்தைகளிடம் அன்புடன் இருந்ததால் அவரை நேரு மாமா (சாச்சா நேரு) என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.  இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு  ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, நவம்பர் 14- ஆம்  தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட முடிவு எடுக்கப்பட்டது. 


 "இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் கவனித்துக் கொள்ளும் விதம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.” என்று நேரு எப்போதும் சொல்வாராம். 


குழந்தைகள் தின வாழ்த்து:



  • குழந்தைகளின் உலகம் சுவாரசியமானது. அதில் உங்களை தொலைத்திடப் பழகுங்கள்.  உங்கள் பிள்ளைகள் உங்களுக்கானவர்கள் அல்ல!  அவர்கள் விரிந்த வானில் சிறகடித்து பறக்கட்டும். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • இந்த வாழ்வில் எங்களுக்கு கிடைத்த ஆகப்பெரும் பரிசு நீ. எப்போதும் மகிழ்ந்திரு... இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • குழந்தைகள் தினம் பால்ய காலம் எவ்வளவு மேஜிக் நிறைந்தது என வளர்ந்த குழந்தைகளுக்கு நினைப்படுத்தும் நாள். . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • கனவுகள் சிறகடித்து பறக்கட்டும். எப்போதும் தயங்காமல் உனக்கு விருப்பமானதை செய்திடு. . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • கள்ளமில்லா சிரிப்பு எப்போதும் தொடரட்டும். . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • இன்றைய நாள் மட்டும் அல்ல, வாழ்க்கை முழுவதும் எப்போது சிரித்துக்கொண்டே இரு. . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • உங்களின் வாழ்க்கை எல்லா வளமுடன் நிறைந்திருக்க வாழ்த்துகள். . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • கண்மணியே, உன் உரிமையும் கல்வியும் எப்போதும் எனக்கு முக்கியம் . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • குழந்தைகள் அவர்கள் இருக்கும் இடங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பர். . இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • குழந்தைப் பருவம் மகிழ்ச்சியுடன் நிறைந்திருக்க எங்களின் வாழ்த்துகள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • வாழ்வும் வளமும் செழித்திட என் வாழ்த்துகள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

  • நீயில்லா உலகம் இவ்வளவு அழகாக இருந்திருக்காது. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!