ஜர்னல் ஆஃப் எபிடெமாலஜி & கம்யூனிட்டி ஹெல்த் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு நீண்ட கால ஆய்வின் கண்டுபிடிப்புகள், பெற்றோரை மிக விரைவில் இழப்பதால் மோசமான விளைவுகளால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறது.
சிறுவயதில் பெற்றோரை இழந்தவர்கள்
21 வயதை அடைவதற்கு முன்பு பெற்றோரை இழப்பது, மோசமான மனநலம், குறைந்த வருமானம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றுடன் பெரிதாக தொடர்புகளை கொண்டிருப்பதாக தரவுகள் குறிப்பிடுகிறது. பெற்றோர் இருவரில் ஒருவர் முன்கூட்டியே இறந்த பிறகு குழந்தையின் நல்வாழ்வுக்கும் வெற்றிக்கும் இடையிலான தொடர்பு முன்பே ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. 21 வயதிற்குள் பெற்றோரை இழப்பது, அவர்களது 26 முதல் 30 வயதுக்கு இடையிலான பருவத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உறுதியான பின்னர், பாலின ரீதியான வித்தியாசங்கள் அதில் உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
எண்ணிக்கை
1971 மற்றும் 1986 க்கு இடையில் பிறந்த மற்றும் 2016 க்குள் 30 வயதை எட்டிய கிட்டத்தட்ட 1 மில்லியன் (9,62,350) நபர்கள் உள்ளனர். அதில் சுமார் 65,797 பேர் 21 வயதிற்கு முன்பே பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களோடு, 30 வயதிற்குப் பிறகு பெற்றோர்களில் ஒருவரை இழந்தவர்களை ஒப்பிடுகையில், அவர்களுள் மனநலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான சதவிகிதத்தில் பெரும் வித்தியாசங்கள் இருப்பதை கான முடிந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண்கள் பெண்கள் பாதிப்பு விகிதம்
தங்களை தாங்களே காயப்படுத்திக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 வயதில் தாயை இழந்த ஆண்களை விட சிறுவயதிலேயே தாயை இழந்த ஆண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதேபோல், சிறு வயதிலேயே தந்தையை இழந்த பெண்கள், மற்றவர்களை விட அதிக எண்ணிக்கையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறுகிறது. இவர்களில் பலர் ஆரம்பகால மகப்பேறு இறப்பு மற்றும் மன அழுத்தக் கோளாறுகளாலும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றது.
ஆண்களுக்கே பாதிப்பு அதிகம்
ஆனால் இது ஒரு அவதானிப்பு ஆய்வு என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆய்வு லேசான மனநலப் பிரச்சனைகளை கணக்கில் கொள்ளவில்லை என்றும் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைக் சேர்த்து கணக்கிடவில்லை, இவை அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆயினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெற்றோரை சிறு வயதில் இழப்பது மன ஆரோக்கியத்தில் அதிக ஆபத்துகளை விளைவிக்கிறது என்றும், அதில் ஒப்பீட்டளவில் அதிகமாக ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பு விகிதங்களிலும் பெரிதாக பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்கின்றனர்.