இந்தியா முழுவது கோடைக்காலம் துவங்கி வெயிலானது கொளுத்தி வருகிறது. கோடை கால வெப்பம் ஒரு நல்ல நிலையில் உள்ள காரின் ஏசியை கூட மெதுவாகச் செயல்பட வைக்கக்கூடும். கார் வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் போது, குறிப்பாக காரின் இதனால் வெப்பநிலையைக் குறைக்க ஏசி வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏசி சரியாகக் குளிரூட்டவில்லை என்றாலே அதில் ஏதோ பழுது இருப்பதாகப் பல ஓட்டுநர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது எப்போதும் உண்மையாக இருக்காது.

Continues below advertisement

பல சந்தர்ப்பங்களில், சில எளிய பழக்கவழக்கங்கள் ஏசியை மேம்படுத்தவும், காரின் உட்புறத்தை விரைவாகக் குளிர்ச்சியாக்கவும் உதவும். வெப்பத்தைச் சரியாக வெளியேற்றுவது, சரியான ஏசி மோடைப் பயன்படுத்துவது மற்றும் அடிப்படைப் பராமரிப்பு போன்ற சிறிய படிகள் கோடை காலத்தில் ஏசி அமைப்பின் சுமையைக் குறைக்கும்.

Continues below advertisement

 வெப்பத்தை வெளியேற்றுங்கள்

கார் நேரடியாகச் சூரிய ஒளியில் நிறுத்தப்பட்டிருந்தால், ஏசியை ஆன் செய்வதற்கு முன்பு ஒரு நிமிடம் கதவுகளைத் திறந்தே வைக்கவும் அல்லது ஜன்னல்களைக் கீழே இறக்கி விடவும். இது காருக்குள் தேங்கியிருக்கும் வெப்பமான காற்று வெளியேற உதவும், இதனால் கேபின் விரைவாகக் குளிர்ச்சியடையும். இது ஏசி சிஸ்டத்தின் மீதான அழுத்தத்தையும் ஆரம்ப நிமிடங்களில் குறைக்கிறது.

மறுசுழற்சி (Recirculation) மோடை பயன்படுத்துங்க

பலர் 'Recirculation' பட்டனைப் பொருட்படுத்துவதில்லை, ஆனால் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மோட் வெளியிலிருந்து வரும் வெப்பமான காற்றை இழுப்பதற்குப் பதிலாக, காருக்குள் ஏற்கனவே இருக்கும் காற்றையே மீண்டும் குளிரூட்டுகிறது. இது ஏசி விரைவாகக் குளிர்ச்சியடைய உதவுவதுடன், கோடை கால நீண்ட பயணங்களின் போது எரிபொருள் சிக்கனத்தையும் மேம்படுத்தும்.

கேபின் ஏர் ஃபில்டரைச் சரிபார்க்கவும்

கோடை காலத்தில் தூசி மிக வேகமாகப் படியும், எனவே காரைச் சர்வீஸ் செய்யும் போது ஃபில்டரைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் அதை மாற்றுவது ஏசியின் செயல்திறனை அதிகரிக்கும். அழுக்கான அல்லது அடைபட்ட கேபின் ஃபில்டர், ஏசி துவாரங்களிலிருந்து (Vents) வரும் காற்றோட்டத்தைக் குறைத்து, குளிர்ச்சியைப் பலவீனப்படுத்தும்.

முடிந்தவரை நிழலில் நிறுத்துங்கள்

நீங்கள் காரை எங்கே நிறுத்துகிறீர்கள் என்பது முக்கியம். நிழலான இடம், விண்ட்ஷீல்ட் சன்ஷேடு (Sunshade) அல்லது டேஷ்போர்டு கவர் போன்றவை காரின் உட்புற வெப்பத்தைக் குறைவாக வைத்திருக்க உதவும். கேபின் வெப்பநிலை குறைவாக இருந்தால், நீங்கள் பயணத்தைத் தொடங்கும்போது ஏசி கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஏசி பராமரிப்பைத் தவிர்க்காதீர்கள்

உங்கள் காரின் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதை மெக்கானிக்கிடம் காட்டிச் சரிபார்ப்பது நல்லது. சில நேரங்களில் ஏசி கேஸ் (Gas) குறைவாக இருப்பது, அழுக்கான கன்டென்சர் அல்லது பிற சிக்கல்கள் குளிர்ச்சியைக் குறைக்கலாம்.

இவற்றையெல்லாம் ஒரு நிபுணரைக் கொண்டு சரிபார்ப்பதன் மூலம் ஏசி சிறப்பாகச் செயல்படும். கோடை காலம் தொடங்குவதற்கு முன்போ அல்லது கோடையின் போதோ ஏசியைச் சரிபார்ப்பது பெரிய பழுதுகளைத் தவிர்க்க உதவும்.