முக சீரம் என்றால் என்ன ?


முக சீரம் பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள் ! முக சீரம் என்பது ஒரு செறிவூட்டப்பட்ட மூலக்கூறுகளால் ஆனது. ஒரு  மாய்ஸ்சரைசரைப் போன்றது. மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சீரம் ஆகியவை ஒரே மாதிரியானவை அல்ல. ஒரு திரவ வடிவத்தில் , இலகுவான பராமரிப்பிற்கு உகந்ததாக இருக்கிறது சீரம். முகச்சீரங்கள் முகத்தை ஹைட்ரேட் செய்து, பொலிவு பெற செய்து பாதுகாக்கும் தன்மையுடவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 


முக சீரம் நன்மைகள் :


முக சீரங்கள் முகத்தில் உள்ள துளைகளை அடைக்கும் தன்மையுடையது.


எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.


பருக்களை நீக்கி முகத்தை பொலிவுற செய்யும் 


கரு வளையங்களை நீக்க வல்லது. 


முகச்சுருக்கங்களை போக்கும் தன்மையுடையது.




எப்படி பயன்படுத்துவது ?


பொதுவாக சீரமை காலை அல்லது இரவு தூங்குவதற்கு முன்னதாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். சீரமை பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்களது முகம் மற்றும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.  இரண்டு மூன்று சொட்டுகளை முகத்தில் தடவிய பின்னர் , உங்கள் கைகளால் இதமான மசாஜ் செய்துக்கொள்ளுங்கள் . 



உங்கள் கண்களைச் சுற்றி ஃபேஸ் சீரம் பயன்படுத்துவது சரியா?


உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தோல் (கண் இமைகள் மற்றும் கண்களின் கீழ்) உங்கள் முகத்தின் மற்ற தோலை விட மெல்லியதாகவும் அதிக உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். எனவே, இது முகத்தின் மற்ற பகுதிகளை விட சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், நிறமிகள் மற்றும் வயதானதற்கான பிற அறிகுறிகளை விரைவில் காட்டுகிறது. எனவே, வறட்சியைத் தடுக்க இந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் முகத்தின் மற்ற பகுதிகளை விட கண் பகுதி மிகவும் மென்மையானது என்பதால், சில வகையான முக சீரம்கள் அவற்றை கடுமையாக பாதிக்கலாம். ரெட்டினோல் மற்றும் எக்ஸ்ஃபோலியேட்டிங் அமிலங்கள் (கிளைகோலிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலம் ) போன்றவை அதிகம் செறிவூட்டப்பட்ட சீரமாக இருப்பதால் அவற்றை பயன்படுத்தக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்



கண்களுக்கான சீரமை பயன்படுத்துங்கள் :


மேற்குறிப்பிட்ட செறிவூட்டப்பட்ட சீரமை கண்களுக்கு கீழே பயன்படுத்த கூடாது. அதற்கு பதிலாக கண்களுக்கான பிரத்யேக சீரங்களை பயன்படுத்தலாம். இது முக சீரங்களை ஒப்பிடும் பொழுது ஆயிலியாகவும் ,  தடிமனான நிலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் . உங்கள் கருவளையங்களைத் தவிர்க்க அல்லது உங்கள் கண் பகுதியைச் சுற்றியுள்ள சுருக்கங்களைக் குறைக்க விரும்பினால் கண்டிப்பாக ஃபேஸ் சீரமை பயன்படுத்தக்கூடாது.




மருத்துவரை அணுகுங்கள் :


பொதுவாக பேஸ் சீரம் சென்ஸிட்டிவான முகத்தில் வினை புரியாது. எனவே நீங்கள் அதிக பணம் கொடுத்து மார்க்கெட்டில் விற்பனையாகும் முக சீரமை வாங்குவதற்கு முன்னதாக சிறந்த தோல் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சிறந்த அறிவுரைகளையும் சீரமையும் வழங்குவார்கள்.