Thunivu Second Look : ‛துணிவே துணை...’ அஜித்தின் துணிவு இரண்டாம் போஸ்டர் வெளியீடு!
AK 61 Title second Look: ரசிகர்களின் ஏக்கங்களை போக்கும் வகையில் அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு (Thunivu) படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்த கூட்டணியில் முதலில் நேர்கொண்ட பார்வை, கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
Just In




இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்று விட்ட நிலையில் அஜித் வரும் நாளை அங்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
படம் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் 6 மாதங்களாக எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. ஆனால் ரசிகர்களின் ஏக்கங்களை போக்கும் வகையில் அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #AK61FirstLook, #AjithKumar ஆகிய ஹேஸ்டேக்குகளில் தற்போது வரை அந்த போஸ்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.