காதலர் தினத்தில் ஒருவருக்கு ஸ்விக்கி, அன்பு மெசேஜ் உடன் பீட்ஸா அனுப்பியது வைரல் ஆகிவருகிறது. 


காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில் ஸ்விக்கியில் சுஸ்மிதா என்பவர் பீட்ஸா ஆர்டர் செய்துள்ளார். காதலர்கள் கொண்டாடும் நாளில் சிங்கிளாக இருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதும் உண்டு. அப்படியிருக்கையில், ஒரு பெண்ணிற்கு ரோஜா மலருடன் ஒரு பேப்பரில் அன்புடன் மெசேஜ் ஒன்றை சேர்த்து அனுப்பியுள்ளது. அதோடு சீஸ் பீட்ஸாவையும் அனுப்பியுள்ளது ஸ்விக்கி.


அந்த மெசேஜில்,” You deserve all the love and Pizza, Crust us!" என்று ஸ்விக்கி அனுப்பியிருக்கிறது. உணவு ஆர்டர் செய்தவருக்கு பீட்ஸா உடன் இந்த வந்திருந்த கடிதத்தை பார்த்தவுடன் ரொம்பவே மகிழ்ச்சியாகிவிட்டது. 


சுஸ்மிதா தனது எக்ஸ் தளத்தில், “என்னால் நம்ப முடியவில்லை. இன்றைய நாள் அழகாகிவிட்டது“ என்று பீட்ஸா உடன் போஸ்ட் செய்திருந்தார். 


ஸ்விக்கி, Zomato உள்ளிட்ட நிறுவனங்களின் Notification -ல் க்ரியேடிவாக அனுப்புவது உண்டு. அதில்,” சுஸ்மிதா உங்கள் வேலண்டைன் மிகச் சிறந்ததை மட்டும் பெற தகுதி கொண்டவர். அவருக்கு நீங்கள் இருக்கிறீர்களே” என்று ஸ்விக்கி அனுப்பியுள்ளது. 


அதை எக்ஸ் தளத்தில் போஸ்ட் செய்து . எனக்கு வேலன்டைன் யாரும் இல்லை; எதற்கு இதை எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? என்று குறிப்பிட்டிருந்தார்.  அதோடு, எனக்கு சீஸ் பீட்ஸா வேண்டும் என்று கமெண்ட் செய்ந்திருந்தார். எக்ஸ் தள உரையாடலில் ஸ்விக்கி சுஸ்மிதாவிடன் அவரது முகவரி விவரங்களை கேட்டறிந்து அவருக்கு பீட்ஸா அனுப்பியுள்ளது வைரல் ஆகி வருகிறது. 


ஸ்விக்கியின் இந்த செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். ’இந்ந நாளில் பலரும் சிங்கிளா இருக்கிறார்கள்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர் “பீட்ஸா உடல்நலனுக்கு நல்லதல்ல. என்னுடைய முகவரியை அனுப்புகிறேன். எனக்கும் பீட்ஸாவில் கொஞ்சம் அனுப்பி வையுங்க” என்று கமெண்ட் செய்துள்ளார்.