உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ஃபாஸ்டிங் செய்வது, மிக குறைவாக சாப்பிடுவது, தினசரி முன்று வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவது, டயட் உணவு முறையை பின்பற்றுவது என பல்வேறு எடைஇழப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆரம்பகட்டத்தில் இந்த எடை குறைப்பு முயற்சியில் பலர் தீவிரமாக ஈடுபட்டாலும், நாளடைவில் ஆரோக்கியமான டயட் உணவுகளை கடைபிடிப்பதை நிறுத்துகின்றனர். மேலும் உணவு கட்டுப்பட்டால் விரக்தி அடைந்து மீண்டும் பழைய உணவுமுறைக்கு மாறிவிடுகின்றனர். ஏனெனில் அவர்களால் பசியை கட்டுப்படுத்த முடியாது. எடை குறைப்பு விஷயத்தில் எந்த ஒரு செயல்களையும் தொடர்ந்து சரியாக பின்பற்றாவிடில் உடல் எடையை குறைக்க முடியாது.


எளிதாக பின்பற்றக்கூடிய டயட்


சில நேரங்களில் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்ட டயட் உணவை உட்கொள்வது கூட உங்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தலாம். இருப்பினும், எல்லா டயட் உணவுகளும் அப்படி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். டயட்டில் பல வகைகள் வந்துவிட்டன. அதில் எதையுமே தொடர்ச்சியாக பின்பற்ற முடிய வில்லை என்பொருக்காக எளிதாக பின்பற்றக்கூடிய டயட் முறையை இங்கு பகிர்ந்துள்ளோம்.



முதல் நாள்


நீங்கள் எப்போது எழுகிறீர்கள் என்பது கணக்கில்லை, எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் குடியுங்கள். இது உடலை ஹைட்ரேட் செய்து, எடை குறைக்க உதவுகிறது. 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, ஒரு கிண்ணம் கஞ்சியை பாலுடன் சாப்பிட்டு, சில உலர் பழங்களை உட்கொள்ளவும்.


மதிய உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் 100 கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட மில்க் பனீர் சாப்பிட்டு, பிறகு ஒரு கிண்ணம் காய்கறி சாலட் சாப்பிட வேண்டும். மதிய உணவிற்கு என்ன தயார் செய்தாலும் சாப்பிடலாம். மதிய உணவுக்குப் பிறகு 1-2 மணி நேரத்திற்குப் பிறகு பழங்கள் மற்றும் ஒரு கிளாஸ் மோர் சாப்பிடுங்கள். மாலையில், நீங்கள் உங்கள் தேநீரைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதில் சர்க்கரை இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டியது அவசியம். இப்போது மீண்டும் ஒரு கிண்ணம் காய்கறி சாலட் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவிற்கு ஒரு கிண்ணம் பருப்பு மற்றும் ஏதேனும் குழம்புடன் ஒரு சப்பாத்தி சாப்பிடவும்.


மீதி ஆறு நாட்களுக்கும் இதே போன்ற டயட்தான் பின்பற்ற வேண்டும். ஆனால் ஒரே உணவை சாப்பிடுவது சிலருக்கு கஷ்டமாக இருக்கும் அதனால் உங்களுக்காக சில வித்தியாசங்களை கொடுடுத்துள்ளோம்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


இரண்டாம் நாள்


உணவில் தேநீருக்குப் பதிலாக காபிக்கு இடம் பெறும்போது, கஞ்சியுடன் ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.


மூன்றாம் நாள்


ஒரு மாற்றத்திற்காக, காலை உணவில் ஒரு மல்டிகிரேன் ப்ரெட் டோஸ்டையும் சிறிது தயிரையும் சாப்பிடலாம். மதிய உணவுக்குப் பிறகு மற்ற பழங்கள் கிடைக்காவிட்டால் வாழைப்பழம் கூட சாப்பிடலாம்.


நான்காவது நாள்


காலை உணவில் ஒரு ஆம்லெட் எடுத்துக்கொள்ளலாம், ஃப்ரூட் அண்ட் நட் யோகர்ட் ஸ்மூத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு கொண்டைக்கடலை மற்றும் கீரையை எடுத்துக்கொள்வது மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.



ஐந்தாவது நாள்


நீங்கள் ஒரு கப் வெட்டப்பட்ட பப்பாளியை மோர் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவிற்கு குறைந்த கொழுப்புள்ள பனீர் கிரேவியை சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.


ஆறாவது நாள்


6 ஆம் நாள் காலை உணவுக்கு இட்லி சாம்பார் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மதிய உணவிற்கு, கத்திரிக்காய் அல்லது பலாப்பழம் போன்ற எந்த காய்கறி குழம்பையும் எடுத்துக்கொள்ளலாம்.


ஏழாம் நாள்


காலை உணவிற்கு இரண்டு தோசை எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவிற்கு ஏதேனும் குழம்புடன் சோறு சாப்பிடலாம். குறைந்த கொழுப்புள்ள பனீர் கிரேவி உடன் சப்பாத்தி சாப்பிட்டு இரவு உணவை முடிக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.