இயக்குநர் பிருந்தா அடுத்ததாக ஆக்சன் படத்தை இயக்க இருக்கிறார். 


இந்திய திரையுலகில் பல மொழிகளில் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றியவர்  நடன இயக்குநர் பிருந்தா.






இவர்   ‘ஹாய் சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஆக்‌ஷன் படத்தை இயக்க இருக்கிறார்.  






இந்தப்படத்திற்கு  ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.'தக்ஸ்' என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இதில் இயக்குகிறார். இந்தப்படத்தில் பாபி சிம்ஹா, ஆ.கே.சுரேஷ், முனிஸ் காந்த், பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு  தயாரிக்கிறார்.