Mint Leaves Benefits: புதினா வாசனை மிக்க கீரை வகைகளில் ஒன்று . இதை எந்த உணவுடன் சேர்த்தாலும் அதன் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இந்த கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது.


புதினாவில்  கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரைபோ மினெவின் தயாமின் , நார்சத்து போன்ற சத்துகள் நிறைந்து இருக்கிறது. இது உணவில் சேர்ப்பதால் செரிமான சக்தியை அதிக படுத்துகிறது. மேலும், என்ன பிரச்சனைக்கு எப்படி புதினாவை பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம்.




கர்ப்பகால வாந்தி - கர்ப்ப காலத்தில் வரும் வாந்தி தவிர்க்க முடியாதது. வாந்தி கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஒரு 4-5 இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி வாயில் வைத்து  மெதுவாக மென்று சாறை விழுங்க வேண்டும். இது வாந்தி வராமல் தடுக்கும். மேலும், வாந்தி வருவது போன்று இருக்கும் உணர்வையும் மாற்றும்.


வயிற்று போக்கு - புதினா இலைகளை அம்மியில் நசுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து அதனுடன் அரைத்து வாய்த்த புதினா இலைகளை சேர்த்து  நன்றாக கொதிக்க வைக்கவும். ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸ் ஆக வரும் வரை கொதிக்க வைக்கவும். பெரியவர்களுக்கு வயிறு போக்கு பிரச்சனை என்றால் அப்படியே குடிக்கலாம். குழந்தைகளுக்கு வயிற்று போக்கு பிரச்சனை  என்றால், 4 டீஸ்பூன் அளவிற்கு கொடுத்தால் போதும்.




வாய் துர்நாற்றம் நீங்க - சிலருக்கு வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு புதினா ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். புதினா இலைகளை  அலசி காய வைத்து கொள்ள வேண்டும். காய்ந்த புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து பொடித்து வைத்து கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை எடுத்து தினமும் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம், பல் பிரச்சனைகள் நீங்கும்.




மாதவிடாய் சீராக - மாதவிடாய் சுழற்சி பிரச்சனை இருப்பவர்களுக்கு புதினா அருமருந்தாக பயன்படும். ஒரு கட்டு புதினா வாங்கி இலைகளை தனியாக நிழலில் உலர்த்தி தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து, பொடியாக வைத்து கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை இரண்டு நேரமும், இந்த பொடியை எடுத்து தேனுடன் கலந்து சாப்பிடவும். இது போன்று செய்து வந்தால் மாதவிடாய் சீராகும்.


புதினா இலைகள் ஒரு கையளவு, எலுமிச்சை பாதியளவு, வெள்ளரிக்காய் நறுக்கியது. அனைத்தையும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் அதை முதல் பானமாக எடுத்து கொள்வது சிறந்தது. ஒரு நாளை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும்.