உங்கள் அஞ்சறை பெட்டியில் இடம் பெற்றிருக்கும் ஒரு உணவு பொருள் வெந்தயம். இதை எடுத்து கொள்வதால், உடல் குளிர்ச்சியாகும் என தெரிந்தது தான். டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். வெந்தய களி செய்து சாப்பிடலாம். வெந்தயம் சாம்பார் தனியாக வைத்து சாப்பிடலாம். இப்படி விதவிதமா ரெசிபி செய்து சாப்பிடலாம்.
இது உடலை குளிர்ச்சிப்படுத்தும். இதில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. மூட்டுவலி, மற்றும் எலும்பு சம்பந்த பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் தினம் வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம். கசப்பு சுவை சேர்ந்து இருப்பதால், இது இன்சுலின் சுரப்பை சீர்படுத்துகிறது. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தினம் ஒரு 10-20 க்கு அதிகமான டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த வெந்தய டீ ஒரு மாற்றாக இருக்கும். அதாவது, வெந்தய டீ குடிப்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். வயிற்றில் இருந்து கெட்ட பாக்டீரியா, மற்றும் பூச்சி பிரச்சனைகள் நீங்கும். வாய் துர்நாற்றம் வீசுதல், மற்றும் வயிறு புண், அசிடிட்டி பிரச்சனை சரியாகும்.
இந்த வெந்தய டீ செய்வது மிகவும் எளிமையான செய்முறை தான் . ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து அதில் 1-2 டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி தேவையான அளவு தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
வெந்தய டீ எப்போது எடுத்து கொள்ளலாம்
நீரிழிவு நோய் இருப்பவர்கள் அதிகாலை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
மாதவிடாய் சுழற்சியில் பெண்களுக்கு வயிற்று வலி இருக்கும் நேரங்களில் இந்த வெந்தய டீ எடுத்து கொள்வது வயிறு வலி, இல்லாமல் பார்த்து கொள்ளும். மாதவிடாய் நேரத்தில் இருக்கும் மனக்குழப்பம் இல்லாமல் இருக்கும்.
வெந்தய டீ எடுத்து கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும். ஏற்கனவே சேர்ந்த கொழுப்புகள் குறையவும் உதவும்.
வெந்தய டீ எடுத்து கொள்வதால், அடிக்கடி படி எடுக்காமல் இருக்க உதவும். அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும்.
பூப்படையும் வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்த வெந்தய டீ எடுத்து கொள்வதால், மார்பக வளர்ச்சி சீராக இருக்கும். மேலும் பெண்களின் ஹார்மோன் சுரக்கும், வளர்ச்சி ஹார்மோன் சுரக்கும்.இதனால் பெண்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும்.