இப்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களை தாங்களே பராமரித்துக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கென சந்தையில் ஏராளமான பொருட்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றுள் எதனை பயன்படுத்துவது என்பதும் , அதன் விலை அதிகமாக இருக்கிறது என்பதான் பலரின் கவலை. இப்படியானவர்களுக்கு நடிகை ரேஷ்மா சில டிப்ஸ் கொடுத்திருக்கிறார் அதனை கீழே தொகுத்துள்ளோம்.
1.ஐஸ் கட்டி ஃபேஸியல் :
ஐஸ் கட்டி ஃபேஸியல் என்பது காலை எழுந்தவுடன் முதல் வேலையாக செய்யலாம் . உங்கள் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு க்யூப் ஐஸை எடுத்து மெல்ல முகத்தில் மசாஜ் செய்து வாருங்கள் . இது காலையில் எழுந்தவுடன் கண்களை சுற்றியிருக்கும் வீக்கத்தை உடனடியாக சரி செய்யும் . அதேபோல முக வீக்கத்தையும் குறைக்கும். நீங்கள் காலை க்ரீம் ஏதாவது போடுவதற்கு முன்னதாக இதனை செய்தீர்கள் என்றால் ,அந்த கிரீமின் பலன் முழுமையாக கிடைக்க இது உதவும். பருக்கள் இருக்கும் நபர்கள் காலை எழுந்ததும் இரண்டு நிமிடம் ஐஸ் கட்டியால் மசாஜ் செய்து பாருங்கள் , விரைவில் மாற்றத்தை உணர்வீர்கள்.
2.exfoliate :
exfoliate என்பது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கும் முறையாகும். இதனை வீட்டிலேயே செய்வதற்கு தேங்காய் எண்ணையில் , காஃபி பவுடரை கலந்து மென்மையாக ஸ்கிரப் செய்ய வேண்டும்.
3.S.P.F :
எஸ்.பி,எஃப் நிறைந்த சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது முக்கியம். கோடைக்காலத்தில் வெயிலில் இருந்து வரும் யூ.வி கதிரில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு இவ்வகை கிரீம்கள் மிகுந்த பலனுள்ளதாக இருக்கும்.வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கட்டாயம் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது முக்கியம்.
4.மேக்கப் நீக்குதல் :
இப்போதைய காலக்கட்டத்தில் இளம்பெண்கள் அனைவரும் மேக்கப் போட்டுக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இரவு தூங்கிவதற்கு முன்பு கட்டாயம் மேக்கப்பை நீக்குவது அவசியம் . மேக்கப்பை நீக்காமல் இருந்தால் அது உங்கள் சரும சுவாசத்தை முடக்கிவிடும். அது பருக்கள் போன்ற ஸ்கின் அலர்ஜியை உண்டாக்கலாம். சந்தையில் கிடைக்கும் தரமான மேக்கப் ரிமூவரை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையென்றால் சுத்தமான தேங்காய் எண்ணையை பயன்படுத்தியும் உங்களது மேக்கப்பை நீக்கலாம்.
5.தேங்காய் எண்ணெய்:
முகம் மட்டும் பராமரித்தால் போதுமா ? கூந்தலையும் பராமரிப்பது அவசியம். சந்தையில் விற்பனையாகும் கெமிக்கல் கலக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஷாம்பூக்களை வாங்கி பராமரிப்பதைவிட , வீட்டில் கிடைக்கும் இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதே போதுமானது. அன்றாடம் வேலைக்கு செல்லும் பொழுது சிலர் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு அலுவலகத்தி்ற்கு செல்ல மாட்டார்கள். அப்படியானவர்கள் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் வைத்துக்கொள்வது அவசியம்.