பால்புதுமையினர் என்றால் என்ன. பால் புதுமையினர் என்று தன்னை அடையாளப் படுத்திகொள்பவர்கள் யார். இன்று பிறப்பால்  ஆண், பெண் என ஆகிய இரு பாலினத்தவர்கள்  மட்டுமென்று இல்லாமல் உடல் ரீதியாக ,பால் ஈர்ப்பு முதலிய விருப்பத்தின் பேரில்  தங்களது பால்  அடையாளங்களை மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.தங்களை இந்த சமூகத்தில் வரையறுத்துக் கொள்வதற்காகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காவும் பயன்படுத்தும் சொல்லாடல் தான் பால்புதுமையினர் (queer).LGBTIQA+ ஆகிய வரையறைகள் பால்புதுமையினரை வகைப்படுத்தும் சொற்கள்.தொடச்சியான புதிய சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் நீங்கள் இவற்றை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது.


L – LESBIAN


லெஸ்பியன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் பிறப்பால் பெண்ணாக பிறந்து எதிர்பால் ஈர்ப்பு அதாவது ஆண்களின் மேல் ஈர்ப்பு கொள்ளாத நபர்.இவர் தனது இவர் தன்பாலீர்ப்பு (ஒரு பெண் மற்றொரு பெண் மீது கொள்ளும் ஈர்ப்பு) கொண்டவராக இருப்பதால் தன்னை லெஸ்பியன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.


G- GAY


 ஆணாகப் பிறந்த ஒருவர் மற்றொரு ஆண் மீது  ஈர்க்கப்படுவதால் தன்னை கே என்று அடையாளப்படுத்தப் படுத்திக்கொள்கிறார்.


B- BISEXUAL


தன்னை பைசெக்ஸுவல் என்று அடையாளப் படுத்திக்கொள்பவர் எதிர்பாலீர்ப்பு அதே நேரத்தில் தன்பாலீர்ப்பு ஆகிய இரண்டையும் கொண்டிருப்பர். ஆண், பெண் ஆகிய இரு பாலித்தவர்களுக்கும் இது பொருந்தும். உதாரணத்திற்கு பிறப்பால் ஆணாக இருக்கும் ஒருவர் ஒரு பெண் மீதும் அதே நேரத்தில் ஒரு ஆண் மீதும் ஒரே சமயத்தில் ஈர்ப்புக் கொண்டிருக்க சாத்தியம் இருக்கிறது.


T – TRANSGENDER


பிறப்பால் ஆண் அல்லது பெண்ணாக பிறந்து ஆனால் தங்களது பால் வகைமையோடு பொருந்திப் போகாமல் உணர்பவர்கள்  திருநர் என்று அடையாளப்படுத்தப் படுவர்.இதில் இரு வகைமைகள் உண்டு


TRANSMAN


பிறப்பால் பெண்ணாகப் பிறந்து தன்னை ஒரு ஆணாக உணர்பவர் திரு நம்பி என அடையாளப் படுத்தப்படுவார்.


TRANSWOMAN


பிறப்பால் ஆணாகப் பிறந்து தன்னை ஒரு பெண்ணாக உணர்பவர் திரு நங்கை என அடையாளப்படுத்தப்படுவர்.


  I­- INTERSEX


இண்டர்செக்ஸ் என அடையாளப் படுத்தப்படுபவர்கள் சமூக அல்லது உடலியல் ரீதியாக ஆண் அல்லது பெண் ஆகிய இரு வகைமைக்குள்ளும் ஒத்துப்போகாதவர்களை குறிக்கும் வார்த்தை.


LGBTQIA+ என்கிற சொல்லாடல்   ஒருவரின் பாலினத் தேர்வு,பாலீர்ப்பு ஆகிய அடிப்படையில் அவர்களுக்கான பொருத்தமான சமூக அடையாளத்தை வழங்குவதை மிக அவசியமானதாக கருதுகிறது இந்தச் சொல்லாடலில் கடைசியில் வரும் + என்பது மேலும் இந்த எந்த வகைமைக்குள்ளும் தன்னை பொருத்துப் பார்க்க முடியாத ஒருவரையும் வரவேற்று இணைத்துக்கொள்வதை குறிப்பதாகும்