பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதனை பலமுறை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அதிகாரிகள், சக அதிகாரிகள் மீது அதே அளவு விதிமீறல்களை பதிவு செய்வதைப் பார்ப்பது அரிது. இதனை மாற்றியமைக்கும் வகையில், பெங்களூருவின் ஆர்டி நகர் போக்குவரத்து காவல்துறை அதன் டிவிட்டர் பக்கத்தில், போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் முழுமையான ஹெல்மெட் அணியாததற்கு சக போக்குவரத்து காவல் துறை அதிகாரி அபராதம் விதித்ததை பதிவு செய்ததுள்ளது. "குட் ஈவினிங். ஹாஃப் ஹெல்மெட் கேஸ் பொலிஸுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என அந்த பதிவில் இடம்பெற்றிருந்தது.
அரை ஹெல்மெட் எனப்படும் half helmet மக்கள் அணிய தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ட்வீட் மிகவும் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பல்வெறு தரப்பு பதில்களை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் இந்த புகைபடத்தை பயன்படுத்தி வாகனத்தின் முந்தைய மீறல்கள், மாசு சான்றிதழ்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டினர். மேலும் ஒரு சிலர் இந்த டிவீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் விதிகளை மீறும் அனைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இந்த டிவீட் மூலம் நாட்டில் தற்போதுள்ள ஹெல்மெட் சட்டங்கள் குறித்து காவல்துறையினரால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.