உங்கள் சமையலறை கத்திகளையோ அல்லது கத்தரிக்கோலையோ பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் விட்டுச் சென்றாலும் அல்லது தண்ணீரில் ஊறவைத்திருந்தாலும், அவற்றில் துருப்பிடிப்பதைக் காண்பீர்கள். துரு என்பது இரும்பின் ஆக்சிடேசனின் விளைவாகும்.


எளிமையான சொல்லவேண்டுமெனில் , தண்ணீர், இரும்பு மற்றும் காற்று ஆகியவற்றினிடையே ஏற்படும் ரியேக்‌ஷனால் ஏற்படுவதே துரு. இரும்பினால் செய்யப்பட்ட எந்த உலோகமும் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆம், இதில் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீலும் அடங்கும். துரு உங்கள் உலோகப் பாத்திரங்கள், பானைகள் மற்றும் கத்திகள் போன்ற கருவிகளை மெதுவாக அழிக்கிறது. இப்படி துருப்பிடித்த பொருட்களால் பழங்கால பொருட்களின் அருங்காட்சியகம் போல காட்சியளிக்கும் சமையலறியிலிருந்து விடுபட சில டிப்ஸ் இங்கே:


வானலியிலிக்கும் துருவை நீக்க உருளைக்கிழங்கு மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பை பயன்படுத்தலாம்
உருளைக் கிழங்கில் உள்ள ஆக்ஸாலிக் ஆசிட் என்ற இயற்கையான அமிலம்  துருவை எளிதாக அகற்றும். எவ்வித பாத்திர உலோகத்திலும் பயன்படுத்த வசதியான ஒன்று இது. பாதியாக வெட்டிய உருளைக் கிழங்கை சோப் தண்ணீரில் அதன் முனையைக் கொண்டு தொட்டு பாத்திரத்தை விளக்கலாம். அதிக துருவிற்கு சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.


பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை


நம் வீடுகளில் சின்க் முதல் பாத்திரம் விளக்குவது வரை அனைத்திலும் பேக்கிங் சோட பயன்படுத்தப்படுகிறது. இது பாத்திரங்களிலிருந்து துருவை உரித்தெடுக்க உதவுகிறது. பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறை கலந்து துருப்பிடித்த இடத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து பிரஷால் கழுவிவிட்டால் துரு முழுமையாக நீங்கிவிடும்.


வெள்ளை வினிகர்


சேண்ட் பேப்பர், எலிமிச்சை, பேக்கிங் சோடா வரிசையில் வினீகரையும் துருவை நீக்க பயன்படுத்தப்படிகிறது. துருவை அகற்றும் வழிகளில் மிகவும் எளிமையானது வெள்ளை வினீகரைப் பயன்படுத்துவது. இரண்டு அல்லது மூன்று கரண்டி வினீகருடன் சிறிதளவு தண்ணீர் கலந்து செய்யப்பட்ட ஒரு ஸ்ப்ரே கலவையை துருப்பிடித்த பாத்திரத்தில் அடித்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும். பிற்கு சேண்ட்பேப்பர் அல்லது பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும்.  


பாத்திரங்கள் துரு ஏறிவிட்டால் அதை தூக்கி எறிவதைவிடுத்து இதுபோன்ற எளிய டிப்ஸ் பின்பற்றலாம்.