மழைக்காலம், குளிர்காலம் வந்தால் பெரும்பாலோனோருக்கு கொண்டாடட்டமாக இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த காலம் வந்தாலே ஒரு பயமும், கோவமும்,நோய் பற்றிய கவலையும், இதை எப்படியாவது கடந்து சென்றால் போதும் என்று தோன்றும். இந்த காலத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு என்ன மாதிரியான ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம் என தெரிந்து கொள்வோம்.
பருவமழை தொடங்கி காலையில் இருந்து மழையும், காற்றும் படாத அவஸ்தை படுத்தி கொண்டு இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு முகத்திற்கு வேகு பிடித்தல், சுடுதண்ணீர் குடிப்பது, மொத்தமான உடைகளை அணிவது, போன்றவற்றை செய்து பாதுகாப்பாக இருங்கள்
இந்த மாதிரி ஆயுர்வேத சிகிச்சை முறைகளை செய்து பாருங்கள்.
- துளசி இலைகளை அரைத்து சாறாக எடுத்து கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம் ஒரு நாளைக்கு காலை,மாலை இரண்டு வேலையும் சாப்பிடலாம்.
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் இரண்டையும் அரைத்து உருண்டைகளாக வைத்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு வேலை சாப்பிடவும். இதனால் ஆஸ்துமாவில் இருந்து குணமாக சிறிது காலம் எடுத்து கொள்ளும்.பொறுமையாகவும், முழுமையாகவும் ஒரு தீர்வாக இருக்கும்.
- வெற்றிலை மற்றும் இஞ்சி இரண்டையும் சாறு எடுத்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் சாறில், ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிக்கவும்.
- குழந்தைக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், வெற்றிலையை சூடாக்கி குழந்தையில் நெஞ்சின் மேல் பகுதியில் வைத்து ஒத்தி எடுக்கவும். வெதுவெதுப்பான சூட்டுடன் இருந்தால் போதுமானது. அதிக அளவு சூடாக இருந்தால் அது சருமத்தில் எரிச்சலை தரும்.
- ஒரு டம்ளர் பாலில், இஞ்சியை அரைத்து, வேகவைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகு தூள், தேன் , மற்றும் சிறிது வெங்காயச்சாறு, கலந்து குடிக்கவும். இது ஆஸ்துமா அறிகுறைகளை குறைக்க உதவும்.
- ஆடாதொடை இலை சாறாக எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
- அதிமதுரம் அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
- தக்காளி சூப் குடிப்பது, ஆஸ்துமா இருமல் மற்றும் இறுக்கத்தில் இருந்து விடப்பட சிறந்த நிவாரணியாக இருக்கும்.
- கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து எண்ணையை மார்பு பகுதியில் மசாஜ் செய்யலாம். இது நெஞ்சு சளியில் இருந்து மீண்டு வர பெரிய நிவாரணமாக இருக்கும்.