Saraswati Puja Ayudha Pooja Wishes in Tamil: நவராத்திரி விழா காலத்தி கடைசி நாள்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. 


நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பல்வேறு வழிகளில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நவராத்திரி விழாவின் போது கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரம் என்ற வழக்கம் உள்ளது. வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகள் வைத்து அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களுடன் உணவு பகிர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். 


நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியது என்று சொல்லப்படுவதுண்டு. 


நவராத்திரி ஒன்பதாம் நாள் நவமி திதியில் ஆயுதங்களுக்கு பூஜை செய்து, தசமி திதியில் அம்பாளின் வெற்றியை கொண்டாட சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.  அம்மன் சரஸ்வதியாக அருள்பாளித்த நாள் கலைவாணிக்கு உகந்த நாளாக சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.  விஜய தசமி நாளில் நல்ல காரியங்கள் தொடங்குவது, குழந்தைகளுக்கு முதன் முதலாக எழுத பழக்குவது உள்ளிட்டவை முன்னெடுப்பது நன்மை தரும் என்று நம்பப்படுகிறது. 


ஆயுத, சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்:



  • சிறப்பு வாய்ந்த நன்னாளில் உங்களுக்கு சரஸ்வதி, லட்சுமியின் அருள் கிடைக்கட்டும். வாழ்த்துகள்.

  • நீங்கள் தொடங்கும் புதிய காரியங்கள் கைக்கூடட்டும். வாழ்த்துகள்.

  • சரஸ்வதியின் அருள் உங்கள் எல்லாருக்கும் கிடைக்கும். குடும்பத்தில் கல்வி தேவி என்றும் இருக்க வாழ்த்துகள்.

  • இந்த நாள் உங்கள் வாழ்வில் எல்லா சிறப்புகளையும் வழங்கட்டும். வாழ்த்துகள்!

  • சக்திக்கு உகந்தவளே உங்கள் குடும்பத்துடன் இருக்கும்போது எல்லாம் வளமுடன் இருக்கும். வாழ்த்துகள்!

  • இனிவரும் காலத்தில் வளமும் ஆரோக்கியத்துடன் தொடரட்டும்! வாழ்த்துகள்!

  • இனிய நவராத்திரி வாழ்த்துகள். லட்சுமியில் அருள் கிடைக்கட்டும்!

  • மன கவலைகள் நீங்கி, அனைத்தும் சீராகும் காலம் வரும் வாழ்த்துகள்!

  • இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்! அன்போடு இருங்கள்!

  • லட்சிமியும், சரஸ்வதியும் உங்களுடன் எல்லாமுமாக இருப்பார்கள். நம்பிக்கையுடன் உங்களது செயல்களை தொடருங்கள். வாழ்த்துகள்.

  • சரஸ்வதி, லட்சுமியின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கும். வாழ்த்துகள்!

  • அறிவும் செல்வமும் உங்கள் குடும்பத்திற்கு நிலைத்திருக்க வாழ்த்துகள்!