பிரயின் ஃபாக்.. இது என்ன புதுசா இருக்கு என்று கேட்கிறீர்களா? இது ஸ்ட்ரெஸ்ஸின் எக்ஸ்டன்ஷன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் 5 வயது குழந்தை கூட ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு எனக் கூறுவதை கேட்க முடிகிறது.


அண்மையில் ஒரு வாட்ஸ் அப் ஃபார்வர்டை பார்க்க நேர்ந்தது.


அதில் ஒரு குழந்தை காலையில் சீக்கிரமாவே எந்திருச்சி, பாத்ரூம் போயி, குளிச்சு, பசிக்குதோ இல்லையோ சாப்பிட்டு, ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தா... வந்தவுடன் அப்பா அம்மா ட்யூஷன், மியூசிக் க்ளாஸ், இந்தி கிளாஸ் , அது இதுன்னு அனுப்பிவிட்டு ராத்திரி சாப்பிடுறதக் கூட ஃபீல் பண்ண முடியாமா தூங்கி வழிஞ்சிக்கிட்டே சாப்பிட்டு தூங்கப் போறோம். எனக்கு நிறைய விளையாடணும், கார்ட்டூன் பாக்கணும், சும்மாவே கொஞ்ச நேரம் படுத்திருக்கணும், சைக்கிள் ஓட்டப் போகணும், சண்டேன்னா நிறைய தூங்கணும். இது எதுவும் செய்ய முடியாததால் ஸ்ட்ரெஸ்ஸாவே இருக்கு. இவ்வாறு அந்தக் குழந்தை சொல்வது க்யூட்டாக இருந்தாலும் எந்த அளவுக்கு ஒரு குழந்தை இயல்பை இழந்து தவிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.


இப்படித்தான் சிறியவர்கள் முறை பெரியவர்கள் வரை ஸ்ட்ரெஸ் ஆட்டிப்படைக்கிறது. இதில் ப்ரெயின் ஃபாக் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சில நாட்கள் நம் மனம் வெற்றிடம் போல் இருக்கும். எதிலும் நாட்டத்துடன் ஈடுபட முடியாது. சரியாக கோர்வையாக பேசக் கூட சிரமமாக இருக்கும். எந்த முடிவும் எடுக்க முடியாது. இது தான் ப்ரெய்ன் ஃபாக். தூக்கமின்மை, அதிகப்படியான வேஎலை, மன அழுத்தம் ஆகியனவையே இதற்குக் காரணம்.


இந்த ப்ரெயின் ஃபாகில் இருந்து விடுபட சில டிப்ஸ்


1. L-Tyrosine


நம் மனமகிழ்ச்சிக்கு டோபமைன் என்ற ஹார்மோன் சீராக சுரக்க வேண்டும். இதற்கு L-Tyrosine என்ற அமினோ அமிலம் தேவை. இந்த குறிப்பிட்ட அமினோ அமிலம் புரதம் அதிகமுள்ள உணவுகளிலேயே கிடைக்கிறது. டோபமைன் தான் மனிதனுக்குத் தேவையான அதி முக்கியமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர். இதுதான் நம்மை ஊக்கமடையச் செய்கிறது. நம் செயல்திறனை சிறப்பாக்குகிறது. நமது கவனத்தை கட்டுக்கோப்பாக வைக்கிறது. இதற்காக ஆப்பிள், அவகாடோஸ், வாழைப்பழம், பீட்ரூட், டார்க் சாக்கலேட் ஆகியனவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் கீரை வகைகள், வால்நட், பாதாம், ஆலிவ் எண்ணெய் ஆகியனவற்றையும் உட்கொள்ளுங்கள்.


2. இந்த 5 விதிகளைக் கடைபிடியுங்கள்


நீங்கள் உங்கள் மூளைக்கு ஓய்வற்ற வேலை கொடுத்தால் அது சோர்வடைந்துவிடும். ஆகையால் உங்கள் வேலைகளை முன்னிலைப்படுத்தி பட்டியலிடுங்கள். அதில் 1, 2 எண் கொண்டவை கட்டாயமாக முடிக்க வேண்டியவை. 3,4 நேரக் கட்டுப்பாடு இல்லாதவை, 5வது அந்த வேலையைச் செய்தால் அது போனஸ் என்று பட்டியலிடுங்கள். இப்படிச் செய்துவந்தால் சோர்வு தெரியாது.


3. உண்ணாவிரதம் இருங்கள்


அவ்வப்போது உண்ணாவிரதம் இருங்கள். இது ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இன்சுலின் எதிர்பாற்றலைத் தரும்.


4. ஊட்டச்சத்துக் குறைபாட்டை கண்டறிந்து சரி செய்யுங்கள்


மன அழுத்தம் எதுவாக இருந்தாலும் ஊட்டச்சத்து குறைபாட்டையும் சரி செய்ய வேண்டும். வைட்டம்மின் பி6, பி9, பி12 ஆகியனவற்றின் அளவு உடலில் நிறைவாக இருக்க வேண்டும். மக்னீசியம் சத்து அவசியம். இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்யுங்கள். ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உடலுக்கு அவசியம்.


5. உடற்பயிற்சி


உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. தவறாமல் காலை அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். அது மூளை செல்கள் வயதான நிலையை அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.