அத்திப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கிறது. இது அனைவரும் சாப்பிடலாமா ? இது இயற்கையிலே இனிப்பு சுவை நிரம்பிய உணவு என்பதால், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா போன்ற பல்வேறு தகவலைகளை தெரிந்து கொள்வோம்


அத்திப்பழம் அப்டியே பழமாகவும் சாப்பிடலாம். காய வைத்து அத்தி பழ ஆடையாகவும் சாப்பிடலாம். பெரும்பாலும் அத்தி பழம் என்றால் அது அத்தி பழ காயவைத்தது தான் தெரியும். அத்தி பழம் தனியாக மரத்தில் இருந்து கிடைக்கும் பழம் ஆகும். இதை அஞ்சீர்  என்ற பெயரில் அழைக்கின்றனர்.




அத்தி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் - பொட்டாசியம் சத்து, நார்சத்து, இரும்பு சத்து ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. இதில் குறைவான கலோரிகள் இருக்கிறது.


யாரெல்லாம் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.




உடல் எடை குறைய - உடல் பருமனாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதை ஸ்னாக்ஸ் ஆக எடுத்து  கொள்ளலாம். இதில் நார்ச்சத்தும், இனிப்பும் சுவையும் இருப்பதால், குறைவாக எடுத்து கொண்டாலே நீண்ட நேரத்திற்கு வேறு எந்த உணவுகளும் எடுத்து கொள்ள வேண்டும் என்று தோன்றாமல் இருக்கும். மேலும் இதில் குறைவான கலோரி உள்ளது. அதனால் கலோரிகள் குறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவு இது.


வளர் சிதை மாற்றம் - இந்த பழத்தில் ஃபைசின் எனும் நொதி இருப்பதால், இது செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் வளர் சிதை மாற்றம் சீராக இருப்பதற்கு இந்த பழங்கள் உதவியாக இருக்கும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வளர் சிதை மாற்றம் சீராக இருக்காது. அதனால் இந்த அத்தி பழத்தை உணவில் சேர்த்து கொள்வதால், உடல் எடை குறைய தொடங்கும் இது உடற் பயிற்சியின் போது தசைகள் அதிக கலோரிகளை எரிப்பதற்கு உதவும். மேலும் உடற் பயிற்சியின் போது சோர்வு ஏற்படாமல் இருக்கும்.




இரத்த சோகை - இதில் இரும்பு சத்து இருப்பதால், இரத்த சோகை குறைபாடு இருப்பவர்கள், இந்த பழத்தை தினம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இதை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், இரத்த சோகை பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம்..


நீரிழிவு நோயாளிகள் - பொதுவாக எந்த இனிப்பையும் அவர்கள் எடுத்து கொள்ள கூடாது.ஆனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை இருப்பவர்களுக்கு இந்த அத்தி பழம் ஒரு மாற்றாக இருக்கும். அளவாக இந்த அத்தி பழத்தை எடுத்து கொள்ளலாம். மேலும் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து, அதன் பிறகு எடுத்து கொள்ளுங்கள்.