சிறுநீர் போகும் இடத்தில் கடுமையான எரிச்சல் ஏற்படுகிறதா. அதோடு முட்டிக்கொண்டு சொட்டு சொட்டாக வந்துகொண்டெ இருந்தால் அது உடலளவில் கடுமையான அசௌகரியத்தை உண்டாக்கும் அல்லது அடிக்கடி திடீரென அறிகுறியே இல்லாமல் அவசரமாக முட்டிக்கொண்டு வந்துவிடும். புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்துள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர்க்கும் இந்த சுரப்பி, அடிவயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை ஒட்டி சிறிய அளவில் அமைந்துள்ளது. சிறுவயதில் செயலற்று இருக்கும் இந்த சுரப்பி, பருவம் வந்தவுடன் விழித்துக் கொள்கிறது. முறுக்கிய மீசை, முறுக்கேறிய கைகள், திரண்ட தோள்கள், தீர்க்கமான பார்வை என, ஆண்மைக்கு அடையாளம் கொடுப்பது, டெஸ்டோஸ்டீரோன்' என்ற ஹார்மோன். ஆண் பருவ வயதை அடையும்போது, இந்த ஹார்மோன் சுரக்கத் துவங்கும்.
இந்த ஹார்மோன் தான், சுருங்கிக் கிடக்கும் புராஸ்டேட் சுரப்பியை வளர்ச்சி பெற செய்கிறது. இவ்வாறு வளர்ச்சி பெறும் புராஸ்டேட் சுரப்பியில், சுரக்கும் ஒரு வகை திரவம், விந்தணுக்கு ஊட்ட சத்தாகள்ளது. உடலுறவு நேரங்களில், ஆண் உயிரணுக்கள் எளிதாக நீந்திச் செல்ல இந்த திரவம் உதவியாக உள்ளது. ஆண் உயிரணுவுக்கு ஊட்டச் சத்தை அளிக்கும் புராஸ்டேட் சுரப்பி, வயதான நிலையில், மக்கர்' செய்ய தொடங்குகிறது. இந்த சுரப்பி வீக்கம் அடைவதால் சிறுநீர் கழிப்பது தடை படுகிறது. சிலருக்கு இந்த சுரப்பியில் புற்று கட்டி உருவாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீர் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய், புராஸ்டேட் சுரப்பிக்கு உட்புறமாக வந்து இனப்பெருக்க உறுப்பை அடைகிறது. இதனால், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால், இச்சுரப்பிக்கு உட்புறமாக செல்லும் சிறுநீர் குழாய், இறுக்கமடைந்து, சிறுநீர் வெளியேறுவது தடைபடும். புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது வீக்கத்தை எளிதில் குணப்படுத்தி விடலாம். ஆனால் அதுவே புற்றுக்கட்டியாக இருந்தால் ஆபத்து.
இதற்குக் காரணம் உங்கள் சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது அதிகப்படியான சிறுநீர் ஏற்படுகிறது. புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால், அச்சுரப்பிக்குள் புகுந்து வரும் சிறுநீர் குழாய் இறுக்கப்பட்டு, சிறுநீர் வெளியேறுவது தடைபடுகிறது. சிறுநீர் வெளியேறுவது தடைபட்டால், உடலின் இயக்கமும் பாதிக்கப்படும். இந்த பிரச்சனை அதிகமாக இருப்பின் மருத்துவரை அணுகலாம். அதோடு சேர்த்து இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உணவே அந்த பிரச்சனைகளை சரி செய்யும் என்று கூறப்படுகிறது. அதற்கு என்னென்ன உணவுகள் பயன்படுகின்றன எப்படி செயல்படுகின்றன என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழம் : சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் வாழைப்பழமும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதே இதற்குக் காரணம். முக்கியமாக பொட்டாசியம் மற்றும் ஃபைபர் இருப்பதால் இது சிறுநீர்ப்பைக்கு மிகவும் சிறந்தது.
நட்ஸ் : பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட்டால் கூட இதனை சரிசெய்யலாம். நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும் அதிக அளவில் இருப்பதால் அது உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். வாரத்திற்கு 4 முதல் 5 முறை பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், பயறு மற்றும் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காய் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தவும், நச்சுகளை அகற்றவும், சிறுநீரகத்தின் சுமையை குறைக்கவும் உதவுகிறது. சில வெள்ளரிகளை தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெள்ளரி கோடையில் கிடைக்கக் கூடிய எளிய காய். இதை ஒரு பெரிய பவுல் நிறைய நறுக்கி சாப்பிடலாம். பொதுவாக வெள்ளரிக்காயை சாப்பிட்டு முடித்த அரை மணி நேரத்தில் வெள்ளரியில் உள்ள நீர் சிறுநீரகத்திற்குள் சென்றுவிடும். தாதுக்கள் நிறைந்த இந்த நீர் சிறுநீரக ஆரோக்கியத்தை திறம்பட மேம்படுத்துவதோடு பல்வேறு சிறுநீரக நோய்களையும் தடுக்கிறது.
பருப்பு மற்றும் கொட்டை வகைகள் : பச்சை பயிறு, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை என தானியம், பருப்பு, கொட்டை வகைகளை உட்கொள்ளலாம். இது சிறுநீர் சம்மந்த பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: கார உணவுகளை தவிர்த்தல் நல்லது. அதிக காரம் கொண்ட உணவுகள் மற்றும், எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிறுங்கள். காபி அருந்துவதைத் தவிறுங்கள். இது சிறுநீரகத்தில் அதிக நீரை உண்டாக்கும். எரிச்சலை அதிகரிக்கும். சிட்ரஸ் ஆசிட் உள்ள பழங்களை தவிர்க்கலாம். எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, தக்களி போன்ற பழங்கள் சிட்ரஸ் பழங்கள் ஆகும், அவற்றை தவிர்க்கவேண்டும்.