இளஞ்சிவப்பு டால்ஃபின்கள் :


அமேசான் நதியில் வாழும் இளஞ்சிவப்பு டால்ஃபின்கள் டால்பின் போடோ அல்லது பிங்க் நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. இந்த இளஞ்சிவப்பு நதி டால்பின்கள் முதலில் சாம்பல் நிறத்தில் பிறக்கின்றன.பின்னர் வயதாக வயதாக ​​அவற்றின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இது கடல் டால்பின்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவை பல் திமிங்கலங்களின் இனத்தின் கீழ் வருகிறது. பெரும்பாலும் அமேசான் படுகையில் மற்றும் அதன் துணை நதிகளில் காணப்படுகின்றன , இவை மிகப்பெரிய இனங்கள் ஆனாலும் இந்த இனத்தில் ஆண் டால்ஃபின்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது. இந்த டால்ஃபின்களின் தன்மை மற்றும் குணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.







பிங் டால்ஃபின் பற்றி தெரிந்துக்கொள்வோம்!



  • இவ்வகை டால்பின்கள் சராசரியாக  சுமார் 185 கிலோகிராம்  எடை மற்றும்  2.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.


  • அதன் அலகுகள் மிக நீண்டதாக இருக்கும் . அவை இரையைப் பிடிக்க உதவுகின்றன.

  • இவ்வகை டால்பின்கள் மீன்கள், நண்டுகள், இறால், பாம்புகள், ஆமைகள் மற்றும் பிற கடல் விலங்குகள் என கிட்டத்தட்ட 53 வகையான உயினங்களை இரையாக்கூடியது.

  • இந்த இளஞ்சிவப்பு டால்பின்கள் இணைக்கப்படாத கழுத்து முதுகெலும்புகளைக் கொண்டுள்ளன, அவை எந்த திசையிலும் சுழலும். நீருக்கடியில்  எல்லா திசைகளிலும் பார்க்க இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

  • விலங்குகளைப் போலவே, இந்த நதி டால்பின்களும் கண்களைத் திறந்து தூங்கும்.

  • இவ்வகை டால்பின்கள் உப்பு நீரில் உயிர்வாழாது . எனவே உப்பு நீரில் இருந்து வெகு தொலைவில் புதிய நீரில் வாழ விரும்பும்.பெரும்பாலும் தனிமையில் வாழ விரும்பும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

  • பிங் டால்பின்கள் பருத்த உடல்கள், குண்டான நெற்றிகள், ஒல்லியான மூக்குகள், குண்டான கன்னங்கள் மற்றும் சிறிய கண்கள் என முற்றிலும் கடல் டால்பின்களில் இருந்து மாறுபட்டவை.

  • பாலூட்டி வகையை சேர்ந்த இந்த பிங் டால்பின்களின்  சராசரி ஆயுட்காலம் 33 மாதங்கள் ஆகும்.

  • பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பெரு மற்றும் பிற நாடுகளில் இந்த இளஞ்சிவப்பு டால்பின்களை காணலாம்.