கற்றாழையில் தோல் பிரச்சனைகள் முதல் செரிமானப் பிரச்சனைகள் வரை அனைத்திற்குத் தீர்வு காணப்படுவதாக நிரூபணமாகியுள்ளது. 


நம்முடைய சருமப் பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக உள்ளது தான் கற்றாழை. இதில் மருத்துவ மற்றும் பொது ஆரோக்கியத்திற்கு பயன்படும் என்பதால் மக்கள் அனைவரும் இதனை அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக தோல் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழைப்பயன்படுத்தி வந்த நிலையில் தான், இந்த கற்றாழையின் தயாரிப்புகளை மக்கள் அதிகளவில் சந்தைகளில் வாங்க ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டனர்.


ஆனால் என்னதான் பதப்படுத்தப்பட்ட கற்றாழைகளை நாம் பயன்படுத்தினாலும் அப்படியே பச்சையாக அதனைச் சாப்பிட்டால் மட்டுமே நல்ல பயனளிக்கும் என்று நிரூபணமாகியுள்ளது.  இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் கற்றாழை அதிகளவில் வளர்க்கப்பட்டுவருகிறது. இச்சூழலில் மக்களுக்கு அதிக நன்மைகள் அளிக்கும் இந்த மூலிகையை எப்படி பயன்படுத்துவது? இதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை இங்கே அறிந்துகொள்வோம்.



கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் | Aloe Vera Medical Benefits:


தோல் பிரச்சனைக்குத் தீர்வு: 


கற்றாழையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே காற்றாழை சாறை முகத்தில் முழுமையாக பூசிக்கொள்ளும் போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதோடு கற்றாழையை தோல் நீக்கி சிறிது சிறிதாக்கி உட்கொள்ளும்போது தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


செரிமான பிரச்சனைக்குத் தீர்வு:


நம் உடலில் சீரான செரிமானம் நடைபெறுவது கற்றாழை சிறந்தது என்று  கூறப்படுகிறது. குறிப்பாக குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதால், செரிமான மண்டலத்தில் உள்ள பாதிப்பை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளை வெளியேற்றுவதற்கு உதவியாக உள்ளது. இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள உதவியாக உள்ளது.


இன்சுலின் அதிகரிப்பு:


கற்றாழை சில மனித  மற்றும் விலங்குகளிடம் நடத்திய ஆய்வில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது என உறுதியாகியுள்ளது. எனவே  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கற்றாழை உட்கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக உள்ளது. இருந்தபோதும் இதுகுறித்த கூடுதல் ஆய்வு தேவை எனவும் கூறப்படுகிறது.



உடல் எடைகுறைக்க உதவும்:


கற்றாழையை உட்கொள்ளும் போது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை அதிகளவில் நாம் பெறுகிறோம். மேலும் இதில் நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் என்பதால் உடலில் தேவையில்லாத எந்தவித கொழுப்புகளும் இருக்க வாய்ப்பில்லை. எனவே நம்மை அறியாமலேயே நம்முடைய உடல் எடைக்குறைக்க கற்றாழை உதவுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கற்றாழை பயனுள்ளதாக இருக்கின்ற நிலையில், இதனை எப்படி நம்முடைய உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் இங்கு நாம் அறிந்துகொள்வோம்.


 கற்றாழை ஜூஸ்: கற்றாழையின் உள்ள சிறிய பகுதியை வெட்டி எடுத்துக்கொண்டு அதில் உள்ள தோலை நீக்கி சிறுது சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லில் கசப்புத்தன்மை மற்றும் வழுவழுப்புத்தன்மை அதிகளவில் இருப்பதால் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆப்பிள் அல்லது வெள்ளரி சாறு ஆகியவற்றுடன் சேர்த்து ஜூஸ் போன்று குடிக்கலாம். கசப்புத்தன்மையுடன் குடிக்க விரும்பாதவர்கள் சிறிதளவு சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிடலாம். இதேபோன்று சாலட்களுடன் சேர்ந்து கற்றாழை நாம் சாப்பிடலாம். மேலும் கற்றாழை ஜெல்லை சாலட் டிரஸ்ஸிங்கில் சேர்க்கலாம். இதன் மெலிதான அமைப்பு காரணமாக ஆலிவ் எண்ணெய், வினிகர் போன்ற பொருள்களுடன் எளிதாக கலந்துவிடும் என்பதால் இதனை இம்முறையிலும் நாம் சாப்பிடலாம்.



குறிப்பாக தீக்காயங்களை ஆற்றுவதற்கு கற்றாழை பயனுள்ளதாக உள்ளது. கற்றாழை ஜெல்லை ஒரு ட்ரேயில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் கற்றாழை ஐஸ்கட்டியாக மாறிய பின்னர் இதனை தீக்காயம் பட்ட இடத்தில் தடவும் போது உடனடியாக எரிச்சல்தன்மை இல்லாமல் உடனடி நிவாரணம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதோடு நாம் நம்முடைய அன்றாட நடைமுறையில் கற்றாழையை உட்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் பால் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் உணவில் கற்றாழையைச் சேர்ப்பதற்கு முன்னதாக ஊட்டச்சத்து நிபுணர்களிடம் உங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்வது கூடுதல் நன்மை பயக்கும்.