எந்த வேடம் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்து அசத்தும் வெர்சட்டைல்  நடிகர் சத்யராஜ். இவருக்கும் சிபி , திவ்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிபி ராஜ் நமக்கு பரீட்சியமானவர்தான். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா குறித்து பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு அச்சு அசலாக சத்யராஜை போலவே இருக்கும் திவ்யா ஒரு  ஊட்டச்சத்து நிபுணர் (Nutritionist).


இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது தனது ஃபாலோவர்ஸிற்காக சில டிப்ஸ்களை எளிமையாக அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளை பகிர்ந்து வருகிறார் திவ்யா. அப்படித்தான் பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் பருக்களை நிரந்தரமாக, எளிமையாக நீக்குவது எப்படி என்பது குறித்து  பகிர்ந்திருக்கிறார். 






அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் “ நான் வேலை நிமித்தமாக தொலைத்தூர பயணங்களை மேற்க்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் என்னுடைய உடல் மிகவும் டி-ஹைட்ரேட் ஆனதால் முகத்தில் குண்டு குண்டாக பருக்கள் வர தொடங்கிவிட்டது. அதற்கு நாம்  தினமும் இந்த ஜூஸை எடுத்துக்கொண்டால் (ஜூஸ் செய்முறை கீழே ) நான்கு முதல் 8 வாரங்களில் முகப்பருக்கள் முற்றிலுமாக நீங்கிவிடும் . முக்கியமாக 4 வாரங்களுக்கு ஜங் உணவுகள் மற்றும் பால் பொருட்களை சாப்பிட கூடாது “ என குறிப்பிட்டுள்ளார்.






சரி திவ்யா சத்யராஜ் பரிந்துரை செய்த ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் .


தேவையான பொருட்கள் :
 
1/2- பச்சை குடை மிளகாய் 
1/2 -வெள்ளரிக்காய்
1/2- பீட்ரூட்
1/2- கேரட்
 மேற்கண்ட காய்கறிகள் அனைத்தையும் நன்றாக நறுக்கி , அதனை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிக்கட்டியோ அல்லது அப்படியோ குடித்து வந்தால் முகப்பருக்கள் நீங்குமாம். ஒரு நாளில் இது சரியாகாது , 4 முதல் 6 வாரங்கள் வரை ஃபாலோ செய்யவேண்டும் என்பதுதான் திவ்யா பகிர்ந்ததில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே..