பளிச்சென்று இருக்கும் சருமம், மாசு மரு இல்லாமல் மிருதுவாக இருக்கும் சருமம் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் தூசும் மாசும் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில் க்ளியர் ஸ்கின் என்பது மிகப்பெரிய சவால் தான். ஆனாலும் சில எளிமையான வழிமுறைகள் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் என நிபுணர்கள். அவற்றில் சில உங்களுக்காக..


பருக்களை உடைக்காதீர்கள்


உங்கள் முகத்தில் உள்ள பருக்களை ஒருபோதும் உடைக்காத்தீர்கள். பருக்கள் இருந்தால் அது முகத்திற்குள் தேங்கி நிற்கும் எண்ணெய், சீபம் மற்றும் பாக்டீரியாவின் வெளிப்பாடு என்று அர்த்தம். நீங்கள் பருக்களை உடைத்தால் பாக்டீரியா வெளியேறி அது மற்ற இடங்களிலும் உருவாக்கும். அதனால் பருக்களை தொடாதீர்கள் உடைக்காதீர்கள். ஆனால் உங்கள் முக்கத்தை இரண்டு முறை கழுவுங்கள். காலையில் தூங்கி எழுந்ததும், தூங்குவதற்கு முன்பும் நன்றாக கழுவுங்கள். முகத்தில் வியர்த்தால் அதை தேங்கவிடாதீர்கள். குளிர்ந்த நீரை முகத்தில் தெளியுங்கள். வியர்வை முகத்திலேயே காய விட்டாலும் பருக்கள் உருவாகும். அடிக்கடி முகத்தை தொடாதீர்கள் அது கிருமிகள் பரவ வழி செய்யும்.


முகத்தை அவ்வப்போது மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள்


குளிர், வெயில், மழை என எந்தப் பருவமாக இருந்தாலும் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். ஆனால் ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு விதமான மாய்ஸ்சரைஸர் தேவைப்படும். அதன்படி நீங்கள் மாய்ஸ்சரைஸரை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். சரும நிபுணர் அறிவுரையின்படி இதுபோன்ற மாய்ஸ்சரைஸர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.


மேக்கப் சாதனங்கள்:
 
 மேக்கப் சாதனங்களை பயன்படுத்தும் போது அதிகப்படியான ரசாயனம் கலந்த சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேக்கப்பை அப்புறப்படுத்தும் போது ஆல்கஹால் இல்லாத சாதனங்களைப் பயன்படுத்துங்கள். தேங்காய் எண்ணெய் கொண்டும் மேக்கப்பை கலைக்கலாம். ஸ்பாஞ்சஸ், ப்ளெண்டர்ஸ், ப்ரஷ்சஸ், மஸ்கரா ஆகியனவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்.


வெந்நீர் பயன்படுத்தாதீர்கள்


வெந்நீர் கொண்ட முகத்தை கழுவாதீர்கள். வெந்நீர் சருமத்தில் உள்ள இயற்கையான மாய்ஸ்சரைஸரை அகற்றிவிடும். இதனால் சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. 


அழுத்தம் தவிர்க்கவும்


5 வயது குழந்தை கூட மன அழுத்தத்திற்கு உள்ளாகும் கால கட்டம் இது. வயது ஆக ஆக அழுத்தங்களுக்கு பஞ்சமில்லை. எனவே டீ ஸ்ட்ரெஸ் செய்யுங்கள். மன அழுத்தம் அதிகமானால் ஒரு நடை பயிற்ச்சி, சைக்கிளிங், நீச்சல் என ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துங்கள். பேட்மின்டன் விளையாடலாம். இல்லாவிட்டால் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். இவ்வாறாக செய்வதால் மன அழுத்தம் நீங்கும். உள்ளத்தின் கண்ணாடி தானே முகம். அதனால் அகத்தூய்மை முகப்பொலிவுக்கு முக்கியம்.