சுய இன்பத்தைப் பொறுத்தவரை ஆண்களை விடப் பெண்களுக்குதான் நிறைய பயன் இருப்பதாகச் சொல்கிறார் பாலியல் நிபுணர். பெண்களால் ஒரே நேரத்தில் பலமுறை உச்சமடைய முடியும் (Multiple Orgasm) ஆனால் ஆண்களால் அது முடியாது என்கிறார்.
ரொமாண்டிக் சுய இன்பம்:
பார்ட்னருடனான உடலுறவுதான் ரொமாண்டிக்காக இருக்கவேண்டும் என இல்லை. சுய இன்பத்தையும் ரொமாண்டிக் ஆக்கலாம். பார்ட்னரை நேசிப்பதற்கு முன்பு தன்னை நேசிப்பது முக்கியம் இல்லையா. கேண்டில் லைட் டின்னர், மெல்லிய இசை என உங்களுக்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். சுய இன்பம் முடிந்த பிறகு நிச்சயம் நீங்கள் நம்பிக்கையாக உணர்வீர்கள்.
படுத்தநிலையில்தான் சுய இன்பம் செய்யவேண்டும் என இல்லை.
சுய இன்பம் பற்றிய விழிப்புணர்வு உள்ள பலரும் படுத்த நிலையில் மட்டும்தான் சுய இன்பம் செய்ய முடியும் எனத் தவறாகப் புரிந்துள்ளனர். உடலுறவைப் போலவே இதற்கும் நிறைய பொசிஷன்கள் உண்டு. குறிப்பாக,
முட்டிப் போட்டபடி கால்களை வெளிப்புறம் நீட்டிய நிலையில் சுய இன்பம் செய்யலாம்.கால்களுக்கு நடுவே தலையணையை வைத்துக் கொள்வது சுய இன்பத்துக்கு உதவும். இதற்குப் பார்ட்னர் தேவை என்று இல்லை. ஆனால் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும்போது உச்ச கோபத்தில் இருக்கும்போதோ இவ்வாறு சுய இன்பம் செய்வது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்கிறார்.
நீண்டநேரம் சுய இன்பத்துக்கு
சிலருக்கு சுய இன்பம் நிமிடத்தில் முடிந்துவிடும் சிலருக்கு நீண்ட நேரம் தேவைப்படுவதாக இருக்கும். அந்தச் சமயங்களில் நீங்கள் உங்கள் படுக்கையறையைத் தேர்ந்தெடுங்கள். பொறுமையாக நிதானமாக படுக்கையில் படுத்தபடி கரங்களைக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடலாம். உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி ஏதோ ஒரு கதைச் சூழலை உருவாக்குவது என இந்தச் சமயத்தில் நீங்கள் செயல்படலாம். அதனால் 25 நிமிடங்கள் உங்களால் சுய இன்பம் செய்ய முடியும் என்கிறார் பாலியல் நிபுணர்
செக்ஸில் இப்படியும் ஒரு வகை...
பார்ட்னருடன் சுய இன்பம் செய்வது விநோதமான யோசனையாக இருக்கும். ஆனால் , உங்கள் பார்ட்னருடன் நேரடியாக செக்ஸில் ஈடுபடாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சுய இன்பம் செய்துகொள்ள உதவலாம்.இதுவும் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாகப் புரிந்துகொள்ள உதவும் என்கிறார்.
உங்களது மற்றும் பார்ட்னருடைய உடல்ரீதியான தேவை என்ன, எங்கே தொட்டால் கூடுதலாகப் பிடிக்கும் என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களை இதன்வழியாகப் புரிந்துகொள்ள முடியும். தூங்கச் செல்வதற்கு முன்பு சுய இன்பம் செய்வது எளிதில் தூங்க உதவும் .அதிக பட்சம் 10 நிமிடங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் உடல் அயர்ச்சி அடைந்து நீங்கள் குழந்தை போல தூங்கச் செல்வீர்கள் என்கிறார்.